இன்று (27-09-2010) மாலை மயிலாப்பூர் சென்றோம். அடுத்த பத்து நாட்களில் (அக் 8 ஆம் தேதி முதல்) நவராத்திரி பண்டிகை வர இருப்பதால், மயிலாப்பூர் இப்போதே களை கட்டி விட்டது.
காதி கிராமோத்யோக் கடையிலும், வடக்கு மாட வீதி முழுதும் பொம்மைகள் குவிந்துள்ளன. எவ்வளவு பொம்மைக் கடைகள் ! அம்மாடியோவ். அழகு, அழகான பொம்மைகள். விலையைக் கேட்கவில்லை - மயக்கம் போட்டு விடுவேனோ என்ற பயம்தான்.
வடக்கு மாட வீதியில் உள்ள விஜயா பூஜைப் பொருட்கள் கடை என்னமாக ஜொலிக்கிறது! நவராத்ரிக்கு வேண்டிய சாமான்கள் கொட்டிக் குவிந்துள்ளன, வண்ண வண்ணமாக. அடுத்த வாரத்தில் கடையினுள் நுழைவதே கஷ்டமாக இருக்கும். கடை பெரிதாக்கப் பட்டுள்ளது. 2 - 3 வருஷங்களுக்கு முன்னால், இந்தக் கடை இவ்வளவு பெரியதாக இல்லை.
சுக்ரா ஜுவல்லரியிலும் புதுப் புது வெள்ளி சாமான்கள் நவராத்திரி ஸ்பெஷல் குவிக்கப்பட்டுள்ளன.
வழக்கம்போல கறிகாய்கள் நிறைய்ய இருந்தன. காலிஃப்ளவர், வெண்டைக்காய், கொத்தமல்லி வண்டி வண்டியாக இருந்தன. பழங்களும் இவ்வாறே - கொய்யா, வாழை, ஆப்பிள், திராக்ஷை, மற்றும் ஆச்சரியகரமாக ஸீதாப் பழங்கள் குவிந்திருந்தன. தேங்காய், புஷ்பங்களைப் பற்றி எழுதவே வேண்டாம்.
ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலும் நவராத்திரிக்கு தயாராகி விட்டது. அக் 8 முதல் ஸ்ரீ கற்பகாம்பாளுக்கு தினம்தோறும் விதவிதமான அலங்காரங்கள். காண கண் கோடி வேண்டும்.
மயிலாப்பூர், மயிலாப்பூர்தான் ...
ராஜப்பா
27-09-2010
இரவு 8-30 மணி

Comments