சமீப காலமாக (19 Sept 2007) ஸ்ரீ சங்கரா டீவி என்னும் ஒரு புதிய சானல் துவங்கியுள்ளது. பங்களூரை தலைமையகமாகவும், சென்னையை Regional அலுவலமாகவும் கொண்டு, முற்றிலும் ஆன்மீக, பக்தி, ஆலய விஷயங்களை ஒளிபரப்புகிறது, பல சமயங்களில் நேரடியாக (LIVE Telecast).
தினமும் மாலை 6 மணிக்கு குருகுலம் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் என்னும் சம்ஸ்கிருத புரொஃபஸர் 15 சிறுமிகள் / சிறுவர்களுக்கு (எல்லாரும் 10-12 வயதிற்குள் இருக்கிறார்கள்) சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுக்கிறார். அவர் முதலில் சொல்ல, குழந்தைகள் அப்படியே திருப்பிச் சொல்கிறார்கள். தினமும் 2 அல்லது 3 Stanza க்கள் தான். முந்தின நாள் சொல்லிக் கொடுத்ததை அடுத்த நாள் ஆரம்பத்தில் மனப்பாடமாக எல்லாக் குழந்தைகளும் சொல்கிறார்கள்; பின்னர் அன்றைய புது ஸ்லோகங்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
சென்ற ஒரு மாதமாக நான் இதை பார்ப்பதை / கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்; அப்போது ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் சொல்லிக் கொடுத்தார். பின்னர் சிவ மானஸா ஸ்தோத்ரம். தற்போது (17-9-2010) பஜ கோவிந்தம் சொல்லிக் கொடுக்கிறார். இது முடியும் நிலையில் உள்ளது. அடுத்து குரு அஷ்டகம் ஆரம்பிக்க உள்ளார்.
மிகவும் இனிமையாக இருக்கிறது. குழந்தைகளின் குரலில் ஸ்தோத்ரங்கள் அமுதமாக உள்ளன. வீடே தெய்வீகமாக மாறிவிடுகிறது.
ராஜப்பா
17-9-2010
காலை 11:00 மணி

Comments