பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவுகின்றனவோ இல்லையோ, புள்ளும் சிலம்பியதோ இல்லையோ, புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்கிறதோ இல்லையோ ... விடியற்காலை. பொழுது எப்போதுமே, எந்த ஊரிலுமே மிக இனிமையான பொழுது என்பது உண்மை.
6-45 மணி என்பதை சிற்றஞ் சிறுகாலை எனச் சொல்ல முடியாவிட்டாலும், ”விடியற்காலை” எனச் சொல்லலாமா? அந்த இனிமையான நேரத்தில் சென்னையில் என்ன நிகழ்கிறது? அதோ பாருங்கள் - புத்தம் புதிய, அச்சு மையின் நறுமணத்தோடு கூடிய செய்தித்தாள்கள் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்டுள்ளன! தமிழில்தான் எத்தனை எத்தனை நாளேடுகள், வார. மாத இதழ்கள் !! எல்லாம் வண்ண மயம். விற்பனை பரபரப்பு.
எதிரிலே, வண்டியிலே சுடச்சுட (நிஜமாலுமே சூடாக) இட்லி, தோசை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள் - இட்லி மணமும், சாம்பார் மணமும் “வா வா” என அழைக்கின்றன. வண்டியைச் சுற்றி 5 - 6 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமக்குத்தான் வறட்டு கௌரவம் ....
ரோடை கடக்க வேண்டுமா, பார்த்து கடக்கவும்; காலை 6-45 தானே என அலக்ஷியம் வேண்டாம். வேல், பனிமலர், வெங்கடேசா, செட்டிநாடு வித்யாக்ஷ்ரம், PS செகண்டரி ஸ்கூல் என பல பஸ்கள் ரேஸ் ஓடும். கூடவே பல IT ஆஃபீஸ் பஸ்கள். மிக கவனம் தேவை.
அது என்ன, ஒரே கூட்டம்? ஓ, பஸ் ஸ்டாப்பா? ஸ்கூல், கல்லூரி, ஆஃபீஸ் போகும் சிறார்கள், இளைஞர்/ இளைஞிகள் கூட்டம் கூட்டமாக 29C, 23Cக்கு காத்திருக்கின்றனர்...
கோயில்களில் ஸ்வாமி, அம்மன் இருவரும் அபிஷேகத்திற்கும், தீபாராதனைக்கும் காத்திருக்கின்றனர் !! எனவே கோயில்களில் நிறைய கூட்டம் கிடையாது. 8 மணிக்குத்தான் வருவார்கள் போல.
இதோ ஆவின் பால் booth. பால் பாக்கெட்டுகளும், மோர், தயிர் பாக்கெட்டுகளும் சுறுசுறுப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன. “பாலை வீட்டுக்குக் கொண்டு போனால்தான் காஃபி,” என்பதால் எல்லார் நடையிலும் ஒரு வேகம். இந்த வேளையில் வெண்ணெய் கிடைக்காது
வீதியின் பல இடங்களிலும், பல வீதியோர கடைகளிலும் பச்சை பசேலென்று முளைக்கீரையும், இன்னும் பல்வேறு கீரை வகைகளும் அப்போதுதான் வந்து இறங்கியுள்ளன. நீங்கள் ஒரு கீரைப் பிரியரா, தினமும் கீரை வாங்காமல் போகமாட்டீர்கள். பிஞ்சு வெண்டை, வெளிர்நீல கத்தரி, பட்டை பட்டையாய் அவரை, பார்த்தாலே வாங்கத் தோன்றும் நீள புடலங்காய், ஆரஞ்சு வண்ணத்தில் பிஞ்சு காரட், இளஞ்சிவப்பில் கிள்ளினால் வண்ணம் தெறிக்கும் பீட்ரூட், தளதளவென்று வாழைக்காய், வாசனை அள்ளிக் கொண்டு போகும் கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா. ... ஓ, எழுதி மாளாது. எல்லார் கையிலும் ஒன்றிரண்டு பைகள், பை நிறைய புத்தம்புதிய காய்கள்.
இனிமையான விடியற்கால அனுபவங்கள் தொடரும் ...
ராஜப்பா
10:45 மணி
11-10-2010

Comments