சென்னையின் பல தெருவோரங்களிலும், கடற்கரைகளிலும், இன்னபிற இடங்களிலும் தள்ளுவண்டிகளில், இரவு நேரங்களில் பளிச்சென ஒளி வீசிக்கொண்டிருக்கும் மின் ட்யூப் விளக்குகளைப் பார்த்திருப்பீர்கள். (உங்கள் ஊர்களிலும் கூட இவை காணப்படும்)
இந்த விளக்குகளுக்கு மின்இணைப்பு எங்கிருந்து கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு வியப்பான விஷயமாக இருந்து வந்தது. சென்ற மாதத்தில் ஒரு மாலைப் பொழுதில் தெருவில் நான் நடந்து கொண்டிருக்கையில் திடீரென எனது கவனம் ஒரு சைக்கிள்-ரிக்ஷா போன்ற ஒரு வண்டியின் மீது விழுந்தது.
அந்த வண்டியில் ஒரு ஆள் கிட்டத்தட்ட 50-60 விளக்குகளை (பார்ப்பதற்கு பழைய பெட்ரோமாக்ஸ் விளக்குகளை போலிருக்கும்) ஏற்றி வந்து ஒவ்வொரு தள்ளுவண்டிக்கும் ஒன்று அல்லது இரண்டு விளக்குகள் வீதம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுதுதான் மர்மம் துலங்கியது - 100-200 விளக்குகளை வாங்கி தினமும் பகல் பொழுதில் அவற்றின் BATTERY களை Charge பண்ணி மாலை வேளையில் அவற்றை வாடகைக்குக் கொடுக்க வேண்டியது, ஒரு இரவுக்கு இத்தனை என பணம் வசூலித்துக் கொள்வது, பின்பு இரவு 9-30, 10 மணிக்கு திரும்ப வந்து விளக்குகளைப் பெற்றுச் செல்வது - இதுதான் அவரது தொழில். A GREAT IDEA.
அருமையான ஒரு யோசனை. மனிதன் எப்படி எப்படியெல்லாம் யோசித்து, தொழில் பண்ணி, நேர்மையாக உழைத்து சம்பாதிக்கிறான்!
இந்த ஆண்டு (2010) தீபாவளி விழாவிற்கு தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் அன்பர்களுக்கும் இனிப்பு பரிசு அளிக்க விரும்பிய 3, 4 IT கம்பெனிக்காரர்கள், அருணை அணுகி 300 கிலோ இனிப்புகள் (லட்டு மற்றும் KAJU KATHLI) ஆர்டர் கொடுத்தார்கள்.
நான்கு சமையற்காரர்களை ஏற்பாடு பண்ணிக் கொண்டு, வேண்டிய சாமான்களை வாங்கிக் கொடுத்து, இந்த இனிப்புகளை தயார் செய்து ஆட்களை வைத்து பாக்கெட் பண்ணி, அருண் ஆர்டரை பூர்த்தி செய்தான். நல்ல லாபம். இதுதான் தொழில் நுட்பம்.
ராஜப்பா
31-10-2010
மாலை 8 மணி

Comments