ஸூர்ய தர்சனத்தைப் பற்றி மஹாகவி ஏதேனும் எழுதியுள்ளாரா என சற்றுமுன் தேடினேன்; எழுதாமல் இருப்பாரா? இதோ அவரது எழுத்தில்:
“பரிதியே பொருள் யாவிற்கு முதலே, - பானுவே, பொன்செய் பேரொளித் திரளே, ”
“கடலின் மீது கதிர்களை வீசிக் கடுகி வான்மிசை ஏறுதியையா
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள் ..”
இன்று (06-02-2011, ஞாயிறு) காலை 6-40க்கு வங்கக் கடலிலிருந்து எழும்பிய ஸூரியனின் பொன்னிற தகத் தகவென்று ஒளிவீசும் அந்த அற்புதக் காட்சியை கண்டு மனம் பறி கொடுத்தேன். தினம் தினம் பார்த்தாலும் சலிக்காத, மனசுக்கு நிம்மதி தரும் இயற்கையின் பேரழகு அது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!
ஏதோ நான் மட்டும்தான் ஸுரிய தர்சனத்தை கண்டு மகிழ்கிறேன் என்று எண்ணியிருந்தேன் - இன்று காலை சுமார் 10 பேரை பார்த்தேன் - எல்லாரும் ஸூரியனின் பொன்செய் பேரொளித் திரளில் மனம் மயங்கி ஸூரியனையே பார்த்துக் கொண்டு இருந்தனர். இன்னும் 10 பேர் ஸூரியனைக் குறித்து ஸ்லோகங்கள் (ஆதித்ய ஹ்ருதயம்?) சொல்லிக் கொண்டிருந்தனர். நேற்று காலை முன்பின் தெரியாத ஒருவர் காரிலிருந்து இறங்கி ஓடிவந்து எங்கள் பக்கத்தில் நின்று “ஓ, What a beauty! Fantastic", என ஆங்கிலத்தில் என்னிடம் சொன்னார்; தினமும் வருவாராம்.
”அகிலம் முழுமைக்கும் பிரகாசம் தருகின்ற, ஸுரியனின் ஒளி என்னிடத்திலிருந்துதான் வருகிறது” - கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் கூறியது. ஸூரியனைப் பார்க்கும் போது, வணங்கும் போது கீதையின் இந்த ஸ்லோகத்தை தான் நான் சொல்லிக் கொண்டிருப்பேன்.
ராஜப்பா
காலை 10:45 மணி
06-02-2011

Comments