ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸத்தின் 339-வது பகுதி இன்று (28 ஃபிப்ரவரி 2011) நடந்தது. இன்று ஸ்ரீராமர் ஜனனம் சொல்லப்பட்டது.
இக்ஷ்வாகு வம்ஸத்தில் பகீரதனுக்குப் பின்னர் வந்த அஜர் என்பவருக்கு தசரதன் பிறந்தார். ரிஷ்யசிருங்கர் மூலமாக தசரதன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பாயஸக் குடம் வந்தது. அந்த பாயஸத்தை தசரதன் இரண்டாகப் பிரித்து ஒரு 1/2 பாகத்தை கௌஸல்யாவிற்கு கொடுத்தார்; மீதமிருந்த 1/2 பாகத்தை மீண்டும் இரண்டாக பிரித்து (அதாவது மொத்தத்தில் 1/4 பாகத்தை) கைகேயிக்கும், மீதமிருந்த 1/4 பாகத்தை இரண்டாக பிரித்து (1/8 பாகம்) இரண்டையும் ஸுமித்ரைக்கும் கொடுத்தார்.
கௌஸல்யாவிற்கு ஸ்ரீராமரும், கைகேயிக்கு பரதனும், ஸுமித்ரைக்கு லக்ஷ்மணன், சத்ருக்னன் ஆகியோரும் பிறந்தனர். குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வந்த வஸிஷ்டர் இரண்டு குழந்தைகள் (லக்ஷ்மணன், சத்ருக்னன்) அழுவதைக் கண்டார். ராமன் பக்கத்தில் தான் இல்லையென்று லக்ஷ்மணனும், பரதன் பக்கத்தில் தான் இல்லையென்று சத்ருக்னனும் அழுதனராம். ராமன் இருந்த அதே தொட்டிலில் லக்ஷ்மணனையும், பரதன் இருந்த தொட்டிலில் சத்ருக்னனையும் விட்டபிறகுதான் அழுகை ஓய்ந்ததாம்.
அன்று முதலே ராமனின் நிழலாக லக்ஷ்மணன் எப்போதும் ராமனின் அருகிலேயே இருந்து ராமனுக்குப் பணிவிடைகள் செய்வதையே தன் கடமையாக செய்துவந்தான் என்பது யாவரும் அறிந்ததே.
இன்று காலையில் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீராம ஜனனத்தை விவரிக்கும் போது மனசுக்கு என்ன நிம்மதியாக இருந்தது தெரியுமா? பக்தி பரவசத்தை அனுபவித்தால் தான் புரியும்.
ஸ்ரீராம சரித்திரம் இன்னும் தொடரும். எல்லாருக்கும் ராம-லக்ஷ்மண-ஜானகியின் அருளாசி கிட்டட்டும்.
ராஜப்பா
28-02-2011
காலை 9:45 மணி

Comments