12-08-2011, வெள்ளிக்கிழமை: எல்லாருடைய வீடுகளைப் போலவே எங்கள் வீட்டிலும் இன்று ஸ்ரீவரலக்ஷ்மி வ்ரதம் நன்கு நடைபெற்றது.
முதல் நாளே பூஜைக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து நிறைய முடிந்து விட்டன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கிருத்திகாவால் பூஜையில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே 12-ஆம் தேதியன்று விஜயா மட்டுமே பூஜை செய்தாள்.
சொந்த வீட்டில் நடக்கும் முதல் வரலக்ஷ்மி பூஜை இது. காலையில் சீக்கிரமே எழுந்து பூஜைக்கான, நைவேத்தியத்திற்கான வேலைகளை விஜயா செய்ய ஆரம்பித்தாள். உதவிக்கு கிருத்திகாவின் அம்மா வந்தார்.
நான் பூஜையை 10-15க்கு ஆரம்பித்தேன். மந்திரங்களை நான் சொல்ல, விஜயா பூஜை செய்தாள். கூடவே அதிதியும் செய்தாள். சிறப்பாக நடந்தது. 11-30 சுமாருக்கு முடிந்தது.
விஜயா பாயஸம், வடை, இட்லி, இரண்டு வித கொழுக்கட்டைகள் (எள், தேங்காய்), மற்றும் ஒரு கறி, ஒரு கூட்டுடன் சாப்பாடு பண்ணினாள். கிருத்திகாவின் பெற்றோர் இங்கு சாப்பிட்டனர். ஸௌம்யா, ஸ்ரீராம் இருவரும் அருணுடன் வந்தனர். அவர்களும் இங்கு சாப்பிட்டனர்.
இவ்வாறாக, இந்த வருஷ பூஜை வெகு விமரிசையாக நடந்தது. எல்லாருக்கும் எங்கள் நமஸ்காரங்கள்.
ராஜப்பா
10:10 காலை
13-08-2011

Comments