ஸ்ரீ வரலக்ஷ்மி வ்ரதம்.
காயத்ரி போன வாரம் - 12-08-2011 வெள்ளிக்கிழமை - வரலக்ஷ்மி விரத பூஜை பண்ணவில்லை. அதனால், அவள் இந்த வெள்ளிக்கிழமை 19-08-2011 அன்று பூஜை பண்ணினாள்.
விஜயாவும் நானும் வியாழன் மாலை 4 மணிக்குக் கிளம்பி, 5 மணி சுமாருக்கு படூர் போய்ச் சேர்ந்தோம். விஜயா காயத்ரிக்கு சிலபல உதவிகள் செய்தாள். அருண் கடைத்தெருவிற்கு சென்று பூஜை சாமான்கள் வாங்கி வந்தான். அன்றிரவு நாங்கள் அங்கேயே தங்கினோம். மறுநாள் வெள்ளியன்று காலை குளித்து பூஜைக்கு தயாரானோம். நைவேத்தியங்களை செய்து, காயத்ரியும் தயாரானாள்.
காலை 10 மணிக்கு நான் மந்திரங்கள் சொல்ல, காயத்ரி பூஜை ஆரம்பித்தாள்.11மணி சுமாருக்கு பூஜை நிறைவுற்றது. தேங்காய் கொழுக்கட்டை, உப்பு கொழுக்கட்டை, வடை, பாயஸம் செய்து நிவேதனம் பண்ணினாள். சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் தூங்கி எழுந்தோம். மாலை 4 மணிக்கு கிளம்பி திருவான்மியூருக்கு 5 மணி அளவில் வந்து சேர்ந்தோம். போகும்போது “சொகுசு” பஸ்ஸிலும் (13.00) திரும்பும்போது ஏஸி பஸ்ஸிலும் (33.00) வந்தோம்.
இவ்வாறாக, இந்த வருஷம் வரலக்ஷ்மி பூஜை பண்டிகை நன்கு நடந்தது.
ராஜப்பா
20-08-2011
3 PM

Comments