நானும் விஜயாவும் இந்த ஆண்டு (2013) இதுவரை நான்கு முறை ஹோசூர் சென்றுள்ளோம்.
15 ஜனவரி : முதலில் ஜனவரி 2013-ல் பொங்கல் பண்டிகைக்கு சாவித்திரியை பெங்களூர் வருமாறு அழைத்தோம்; அவளும் வந்தாள். பொங்கலுக்கு அடுத்த நாள் காலை 15-01-2013 அன்று நாங்கள் மூவரும் ஹோசூர் சென்றோம். சாவித்திரி எங்களை 17-ஆம் தேதியன்று பாத்தகோட்டா என்ற கோவிலுக்கு கூட்டிப் போனாள். ராமர் கோவில். தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது. 17 மாலை பெங்களூர் திரும்பினோம்.
26 ஜனவரி : இரண்டாவது முறை. அஷோக், நீரஜாவுடன் காரில் பாத்தகோட்டா ஸ்ரீராமர் கோயிலுக்குச் சென்றோம். வழியில் ஹோசூரில் சாவித்திரியையும் கூட்டிப் போனோம். திரும்பும்போது ஹோசூரில் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, சாவித்திரியை அவள் வீட்டில் விட்டுவிட்டு பெங்களூர் திரும்பினோம்.
11 மே : மூன்றாவது முறை. சாவித்திரியின் 70-வது பிறந்த நாள் விழா. கோயிலில் அபிஷேகம். அடுத்த நாள் ருத்ராபிஷேகம் வீட்டில் கோலாகலமாக நடந்தது. அஷோக், அருண், நாங்கள் இருவர் சென்றோம்.
28 ஆகஸ்ட் : நான்காவது முறை. இம்முறை நான் மட்டும் சென்றேன். மூன்று நாட்கள் அங்கு இருந்து விட்டு 31 ஆகஸ்ட் பெங்களூர் திரும்பினேன்.
ராஜப்பா
4-9-2013

Comments