நேற்று (ஞாயிறு, 9th மே) மாலை 5 மணி சுமாருக்கு விஜயாவும் நானும் “சிறிதாக கொஞ்சம்" walking போகலாம் என எண்ணி, 3rd அவென்யூவில் போனோம். கொஞ்ச தூரம் என்பது 3rd அவென்யூவைத் தாண்டி, பெசண்ட் அவென்யூவில் தொடர்ந்தது.
பெசண்ட் அவென்யூ முழுதும் நடந்த பிறகு, அங்கிருந்து அருகிலுள்ள ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமி கோயிலிற்கு போக ஆசைப்பட்டோம். டிராஃபிக்கினுள் நுழைந்து, புகுந்து கோயிலுக்குப் போனோம். கடைசியாக இந்தக் கோயிலுக்குச் சென்று சுமார் 2 ஆண்டுகள் ஆகியிருக்கும்.
திருவனந்தபுரத்தில் இருப்பது போலவே இங்கும் கோயில் அமைந்துள்ளது. பெருமாள் சயன கோலத்தில் காக்ஷி கொடுக்கிறார். மூன்று வாசல்கள் வழியாகத்தான் பெருமாளைத் தரிஸிக்க முடியும்.
கோயிலில் நுழைந்த சமயம் பெருமாளுக்கு தீபாராதனை ஆரம்பித்தனர். மனம் குளிர, மிக மகிழ்ச்சியோடு ஸ்வாமியை தரிஸித்தோம். தீபாராதனைக்குப் பிறகு, ப்ராகாரம் சுற்றி விட்டு, வீடு திரும்பினோம்.
கோயிலில், பூமாதேவி, ப்ரஹ்மா, தக்ஷிணாமூர்த்தி, திவாகர கருடன், இஷ்ட ஸித்தி விநாயகர், மஹாவிஷ்ணு, நவக்கிரகம், வீர ஆஞ்சனேயர் முதலானோர்க்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன.
அனந்த பத்மநாப ஸ்வாமி சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்வதாக இங்கு ஐதீகம். சிவலிங்கமும் உள்ளது. கோயில் 30 வருஷங்கள் முன்பு கட்டப்பெற்றது.
மாலைப்பொழுது மிக திருப்தியாக கழிந்தது; அன்று 3 அல்லது 3.5 கிமீ நடந்திருப்போம்.
ராஜப்பா
1000 AM
10-05-2010

Comments