மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீச்வரர் திருக்கோயிலில் இந்த வருஷம் பங்குனி உற்சவம் மார்ச் 27_ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. மார்ச் 30 காலை அதிகார நந்தியில் ஸ்வாமி புறப்பாடு. ஏப்ரல் 1_ஆம் தேதி ரிஷப வாஹனம்.
ஏப்ரல் 3-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 7-30க்கு திருத்தேர். விஜயாவும் நானும் சீக்கிரமே எழுந்து, குளித்து, 7 மணிக்கு மயிலாப்பூர் கிளம்பினோம். மந்தைவெளி பஸ் நிறுத்தத்தில் இறங்கி, நடக்க ஆரம்பித்தோம். உமாவும் வந்தாள். ஆதம் தெரு வழியாகச் சென்று தேரை தரிஸித்தோம். விநாயகர், ஸ்வாமி, அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களையும், ஸ்வாமிகளையும் நன்கு தரிஸித்தோம். ஸ்வாமி தேருக்கு மட்டும் கூட்டம் இருந்தது.
தேர்களை தரிஸித்த பின்னர், கோயிலுக்குச் சென்றோம். அம்பாள், ஸ்வாமியை கண்குளிர தரிஸித்தோம். திரும்பும் வழியில், மாமி மெஸ்ஸில் இட்லி சாப்பிட்டோம்.
நீண்ட நேரம் பஸ்ஸுக்காக மந்தைவெளியில் காக்க வேண்டியிருந்தது. 11 மணி சுமாருக்கு வீடு திரும்பினோம்.
ஏப்ரல் 4-ஆம் தேதி (புதன்) 63-வர் உற்சவம். 63-வரை தரிஸிக்க மதியம் 3 மணிக்கே தயாராகி விட்டோம். ஆனால், சில தவிர்க்க இயலாத காரணங்களினால் போக முடியவில்லை. வருத்தமாக இருந்தது.
ராஜப்பா
10:45 மணி
4-4-2012

விநாயகர் தேர்
ஸ்வாமி தேர்
ஸ்வாமி தேர்
அம்பாள் தேர்
முருகன் தேர்

Comments