ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஆராதிக்க மிகச்சிறந்த நாள் ஏகாதசி. ஒவ்வொரு வருஷத்தி்லும் 25 ஏகாதசிகள் உள்ளன; இவற்றில் மார்கழி மாசம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசிதான் "வைகுண்ட ஏகாதசி" என அழைக்கப்படுகிறது. இன்று உபவாஸம் இருந்து நியமத்துடன் ஸ்ரீமஹாவிஷ்ணுவை பூஜிப்பவருக்கு இம்மையில் வைகுண்டத்தைப் போன்ற சுகமும், வாழ்க்கையின் இறுதியில் ஸ்ரீவைகுண்டமும் கிடைக்கும் என்பதால் இது "வைகுண்ட ஏகாதசி" எனப்படுகிறது.
நேற்று (05 ஜன 2012) வியாழன் விடிகாலையில் - பல பெருமாள் கோயில்களில், முக்கியமாக ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) வெகு விமரிசையாக நடந்தது.
மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு விடியற்காலம் 4 மணிக்கு சென்று, விஜயா பெருமாளைத் தரிசித்து வந்தாள்; மாதவனை தரிசிப்பதாகத்தான் முதலில் இருந்தது; பின்னர் கேசவன் என ஆயிற்று. நல்ல கூட்டம் எனச் சொன்னாள்.
எதிர்வீட்டு உமா மாமி, மாமா, TSG மாமா, மாமி ஆகியோரும் சென்றனர். வந்த எல்லா பக்தர்களுக்கும் THE HINDU சார்பில் ஒரு HINDU பேப்பரும் அதனுடன் “வைகுண்ட ஏகாதசி” என்ற தலைப்பில் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உபன்யாஸம் DVDயும் இலவசமாக வழங்கப் பட்டன. அவரது சொற்பொழிவு மிக அருமையாக உள்ளது (வழக்கம் போல).
ராஜப்பா
06-01-2012
11:30 காலை
நேற்று (05 ஜன 2012) வியாழன் விடிகாலையில் - பல பெருமாள் கோயில்களில், முக்கியமாக ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) வெகு விமரிசையாக நடந்தது.
ஸ்ரீஆதிகேசவ பெருமாள் - மயூரவல்லித் தாயார்

Comments