சுமார் 2 வருஷங்கள் ஆகியிருக்கும் என எண்ணுகிறேன் - மயிலாப்பூர் ஸ்ரீ ஆதி கேஸவனை தரிஸித்து. இன்று (18-01-2011) போனோம்.
மாலை 4-30க்கு கிளம்பி, கோயிலுக்குப் போனோம். முதலில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை தரிசித்துக் கொண்டோம். பின்னர், ஸ்ரீ வேதாந்த தேஸிகர் கோயிலுக்குச் சென்றோம். பளிச்சென்று விளக்குகள் போட்டு, பெயிண்ட் அடித்து கோயிலே ஜொலித்தது.
ஹயக்கிரீவர், ஸ்ரீநிவாஸப் பெருமாள், அலமேலு மங்கா தாயார், கருடாழ்வார், ஆண்டாள் ஆகியோரை தரிசித்துக் கொண்டு, அருகிலுள்ள ஸ்ரீ ஆதிகேஸவப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம்.
மிகப் பழமையான கோயில். மரகதவல்லி தாயார்.பேயாழ்வாரின் புனித ஸ்தலம். கேஸவப் பெருமானின் கோயில் குளத்தில் அவதரித்தார் என்பது வரலாறு. எல்லா சன்னதிகளிலும் தரிசித்துக் கொண்டோம். என்னுடைய நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது.
அடுத்து, ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். கூட்டம் அதிகமில்லை. நல்ல தரிசனம் கிடைத்தது.
சில கடைகளுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது மணி 7-15.
ராஜப்பா
மாலை 8:20 மணி
18-01-2011

Comments