சூரியோதயம்.
பெஸண்ட்நகர் வந்ததிலிருந்தே ஒரு வருஷத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட தினம்தோறும் காலையில் தவறாமல் பீச்சில் walk போவது எனது வழக்கமானது. பாகவதம் கேட்டுவிட்டு 6-45க்குப் பிறகுதான் கடலோரம் செல்வேன். எனவே சூரியோதயத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறவில்லை.
இந்த மாசமாவது சூரிய உதயத்தை பார்த்து விட உறுதி கொண்டேன். சனிக்கிழமை, ஜனவரி 22ஆம் தேதி காலை 6-15க்கே விஜயாவும் நானும் வீட்டை விட்டு கிளம்பினோம். 6-36க்குத்தான் உதயம் என பேப்பரில் படித்ததால், 6-30 வரை பீச்சில் நடந்தோம்.
இந்த வருஷம் சென்னையில் “குளிர்” கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால். காலை 6-15 மணிக்கு குளுகுளுவென்று நன்றாக இருந்தது. 6-30க்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து உதயத்திற்காக காத்திருந்தோம். 6-34க்கு அடிவானத்தில் சிகப்பு வண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அன்று மேகங்கள் இருந்ததால், சூரியனின் முதற் கிரணங்கள் 6-40க்குத்தான் புலப்பட்டன.
6-45க்கு தக தகவென சிகப்பு நிற சூரியன் கடலிலிருந்து கிளம்பியது - பரவசமான ஒரு காக்ஷி. வானமே ஒளிமயமானது.
6-50 வரை சூரிய உதயத்தை ரசித்துவிட்டு, உள்ளத்திலே மகிழ்ச்சி பொங்க நடையை தொடர்ந்தோம்.
அடுத்த நாள், ஞாயிறு, 23ஆம் தேதியும் இவ்வாறே காலை 6-15க்கு கடற்கரை சென்று சூரிய உதயத்தை 6-40 க்கு ரசித்தோம்.
இயற்கையின் அழகே தனிதான். மனதை கொள்ளை கொள்ளும் பிரமிக்க வைக்கும் அழகு.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா ...
ராஜப்பா
24-01-2011
காலை 10:30 மணி

என்னுடைய ஃபோன் காமி்ராவிலிருந்து ..

Comments