Skip to main content

Posts

Showing posts from April, 2009

தமிழ் சினிமா பழைய பாடல்கள்

VINTAGE SONGS FROM TAMIL FILMS 25-04-2009 சனிக்கிழமை . காலையில் மயிலாப்பூர் டைம்ஸ் பார்த்ததுமே, முடிவெடுத்து விட்டோம் - சாயங்காலம் PS High School-க்கு போவோம் என. பழைய தமிழ் சினிமாப் பாடல்களை வீடியோவில் காண்பிக்க இருப்பதாக அந்த அறிவிப்பு சொன்னது. மாலை 6-10க்கு ஹாலுக்குப் போய்விட்டோம் - கூட்டம் அவ்வளவு இருக்காது என எண்ணிய எனக்கு, வியப்பு - 120க்கும் மேலாக வந்திருந்தனர். Dr சுதா சேஷய்யனுக்குக் கூட இவ்வளவு பேர் வரவில்லை, போன வாரம். 1940-50 களில் வந்த தமிழ் சினிமா பாடல்களோடு நிகழ்ச்சி ஆரம்பமானது - சிவகவி யில் (1943) MK தியாகராஜ பாகவதரின் வஸந்த ருது தான் முதல் பாட்டு. பின்னர் சகுந்தலை யில் GNBயும் MS-ம் சேர்ந்து பாடிய பாட்டு. MS எவ்வளவு இளமையாக காணப்படுகிறார்! ஜெமினியின் அபூர்வ சகோதரர்களி லிருந்து பானுமதி பாடிய “ ஆடுவோமே, கீதம் பாடுவோமே” அடுத்த பாட்டு. “ நீல வானும் நிலவும் போல ” -இது பொன்முடி பாட்டு. பின்பு இதயகீதம் பட பாட்டு. மந்திரிகுமாரி படத்தின் புகழ்பெற்ற “ உலவும் தென்றல் ஓடம் இதே ...” க்குபிறகு, வனசுந்தரி படப்பாட்டு. பாதாளபைரவி யின் “ காதலே தெய்வீக காதலே ” தொடர்ந்தது. “

Kamba Ramayanam

எல்லாரும் சுதா சேஷய்யன் பற்றிய blogpost படித்திருப்பீர்கள். இதோ கம்பரின் எழுத்தோவியம் உங்கள் முன்னால் கைகேயி சுமந்திரனை கூப்பிட்டு, ஸ்ரீராமனை அழைத்து வருமாறு சொன்னாள். எதற்கென்று காரணம் தெரியாத சுமந்திரன், மகிழ்ச்சியோடு போய் ஸ்ரீராமனை அழைக்கிறான். 'கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப் பெற்றவன் தன்னைப் போலப் பெரும்பரிவு இயற்றி நின்றார்; சிற்றவை தானும், "ஆங்கே கொணர்க!" எனச் செப்பினாள் அப்பொன் தட மகுடம் சூடப் போகுதி விரைவின்' என்றான். 85 (சிற்றவை - சித்தி) ஏழ்-இரண்டு வருஷங்களுக்கு வனவாஸம் போகுமாறு ஸ்ரீராமனிடம் கைகேயி சொல்கிறாள்: ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த் தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு, பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி, ஏழ்-இரண்டு ஆண்டின் வா" என்று, இயம்பினன் அரசன்' என்றாள். 111   இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்டஅப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா! 112

Dr சுதா சேஷய்யன் - கம்ப ராமாயணம்

Dr Sudha Seshayyan and Kamba Ramayanam “ சுதா சேஷய்யன் இன்று மாலை மயிலாப்பூர் PS High School-ல் ஸ்ரீராம அவதாரம் என்கிற தலைப்பில் உரையாற்றுவார்” என்ற செய்தியை நேற்று காலை (18-04-2009) மயிலாப்பூர் டைம்ஸில் பார்த்தவுடன், இந்த நிகழ்ச்சிக்குத் தவறாமல் போகவேண்டும் என விஜயாவும், நானும் தீர்மானித்துக் கொண்டோம். சுதா சேஷய்யன் அவர்கள் ஒரு தலைசிறந்த சொற்பொழிவாளர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கம்ப ராமாயணத்தை “ கரைத்துக் குடித்து ” அதில் “ முழுகி எழுந்தவர் " . அவரது கம்ப ராமாயண சொற்பொழிவுகள் மிக பிரசித்தம். தமிழில் நல்ல புலமை. (ஆங்கிலத்திலும்). அவரது சொல்லாற்றலும், தடையில்லா சொல் பெருக்கும் கேட்க கேட்க ஆனந்தமாயிருக்கும். மாலை 5-45க்கு ஹாலை சென்றடைந்தோம்; எனக்கு வியப்பும், நிறைய ஏமாற்றமும். 80-85 நபர்கள் மட்டுமே அமரக்கூடிய ஒரு குட்டி ஹால்! இந்தச் சிறிய ஹாலிலா சுதா பேசப்போகிறார்?! “இருக்காது, தவறான இடத்திற்கு நாம் வந்துள்ளோம்” என நினைத்த போது, “இல்லை, சுதா சேஷய்யன் இங்குதான் பேச இருக்கிறார்” என்பது உறுதியாகியது. வழக்கம்போல, அவர் மிக நன்றாக சொற்பொழிவாற்றினார். ஸ்ரீராம அவதாரத்தி

மயிலாப்பூரும், மாவடுவும் .. Mylapore and Maavadu

கோடை காலத்திற்கான் முன் அறிவிப்பு அறிகுறிகளில், மயிலாப்பூர் தெற்கு மற்றும் வடக்கு மாட வீதிகளில் மாவடு வரவு முக்கியமான ஒன்று. தெற்கு மாட வீதியில் கொட்டி வைத்திருக்கும் மாவடுக்களை பார்க்கும்போதே நம் வீட்டு பெண்களுக்கு கைகள் உதற ஆரம்பித்து விடும்; உடம்பும் என்னவோ பண்ணும். அந்த க்ஷணமே மாவடுக்களை வாங்கி, ஊறுகாய் போட கை துறுதுறுக்கும். விஜயாவும் இந்த உலக நியதிக்கு விலக்கு அல்ல - விதவிதமாக ஊறுகாய் போடுவதில் அவள் ஒரு எக்ஸ்பர்ட். இந்த 2009 வருஷம் விஜயாவை முந்திக்கொண்டு விட்டாள் எங்கள் காயத்ரி! வாசலில் வந்தது என 2 படி மாவடு வாங்கி, விஜயாவிடமிருந்து செய்முறை கேட்டறிந்து, காயத்ரி ஊறுகாய் போட்டுவிட்டாள். ஊறுகாய்க்கு தேவைப்படும் கல்லுப்பு, மிளகாய்ப் பொடி (ஹைதராபாத் பொடி) ஆகியவைகளை விஜயா தயார் பண்ணிக்கொண்டு, மாவடு 5 படி (படி 20.00) வாங்கி ஊறுகாய் போட்டாள். இப்போது தினமும் தொட்டுக்க மாவடுதான். இதோ இன்று - 10 ஏப்ரல் - மயிலாப்பூரிலிருந்து ஹைதராபாத்துக்கு 5 படி மாவடு பயணம் செய்கிறது. ராஜப்பா 8:10 இரவு, 10-04-2009

தயிர் சாதமும் வாழைப்பூ மடலும்

Thayir Saadam and Vaazhaipoo madal *** adapted from what I read somewhere சொல்லி மாளுமா என்று தெரியவில்லை. வக்கணையாக செய்யப்பட்ட தயிர்சாதத்தை ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம் என்றாலும் முதல் கட்டமாக சிலவற்றைச் சொல்லலாம். ஆவக்காய், எலுமிச்சை இதர ஊறுகாய் வகைகள், சாம்பார், குழம்பு, காய், கூட்டு, துவையல்… எல்லாவற்றையும் முந்திக் கொண்டு மாவடு. இன்னும் முக்கியமாக வேறு எதனோடும் சேராமல் அல்லது தயிர்சாதத்திற்கென்றே பிரத்யேகமாக ஜீவித்திருப்பது மோர்மிளகாய். எனக்குத் தெரிந்து வீட்டைத் தவிர ஹோட்டல்களில் சரவண பவனுக்குத்தான் இதில் முதலிடம். குறிப்புகள் இனி வரும். வாழைப்பூ கேள்விப்பட்டிருக்கலாம். அதற்கும் தயிர்சாதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும்முன் கொஞ்சம் சொந்தக் கதை. வாழைப்பூ வாங்கி உரிக்கும் நாளிலெல்லாம் எங்களுக்கு பாட்டி சாதம் பிசைந்து கையில் போடுவார். கைக்கு அடியில் வாழைப்பூவின் மடலில் ஊறுகாயை வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்துக்கொண்டால்(மாவடுவாக இருந்தால் ஒரு கடி கடித்து வாயிலேயே வைத்துக் கொள்ளலாம்.), அதில் பாட்டி சாதத்தைப் போட, அது பாட்டுக்கு அளவில்லாமல் உள்ளே இறங்கு

மயிலாப்பூர் கோயில் தேர் மற்றும் 63வர் உத்ஸவம்

Mylapore temple Ther and 63var Uthsavam 06-04-2009 திங்கட்கிழமை அன்று காலை மயிலாப்பூர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. விஜயாவும் நானும் 10-15க்கு சென்றபோது, தேர் வடக்குமாட வீதியில் இருப்பதாக அறிந்தோம். வடக்கு மாட வீதிக்குச் சென்று தேரில் உலா வந்த ஸ்வாமி, அம்மன், முருகன் ஆகியோரை தரிசித்தோம். கூட்டம் அதிகமாக இருந்தது. நிறைய இடங்களில் சக்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, மோர் ஆகியவற்றை கொடுத்துக் கொண்டே இருந்தனர். வெயில் கொளுத்தியதால், தெருவில் தண்ணீரை ஊற்றிக்கொண்டே போனார்கள்; இந்த வருஷம் ஒரு தண்ணீர் லாரியை ஏற்பாடு செய்து அதிலிருந்து நீர் கொட்டுமாறு செய்திருந்தார்கள் - நல்ல யோசனை. 07-04-2009 செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு 63 நாயன்மார்கள் ஊர்வலம். இதை பார்ப்பதற்கு லலிதாவும், குமாரும் ஆவடியிலிருந்து காலை 11-45க்கு வந்தனர். சாப்பிட்ட பிறகு 3-15க்கு அவர்கள் 2 பேர், நாங்கள் 2 பேர், சதீஷ் ஆகிய 5 பேரும் கோயிலுக்குப் புறப்பட்டோம். கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே ராமகிருஷ்ண மடம் தெரு, தெற்கு மாட வீதி வழியாக கோயில் கோபுரம் போனோம். கீழ வீதிக்குச் சென்று ஸ்வாமி, அம்மன், முருகன்

பொன்னை விரும்பும் பூமியிலே ...

பொன் (GOLD) ஒரு சேமிப்பாக கருதலாமா? அல்லது, சேமிப்பு (investment) என்ற முறையில் தங்கம் வாங்குவது அவ்வளவு சிறந்தது இல்லையா? மனதிலே ஆயிரம் எண்ணங்கள். இருந்தும், துணிந்து நேற்று மாலை - என் 67 வருஷ வாழ்க்கையில், விஜயாவின் 59 வருஷ வாழ்க்கையில் முதல் முறையாக - தங்கம் (காசு) வாங்கினோம், ஓரிரண்டு கிராம்களே. எதற்கும் “முதல் முறை” வேண்டுமல்லவா? பொன்காசு, மற்றும் பொன் நகைகள் வாங்கும்போது, பல சங்கேதக் குறியீடுகளை சந்திக்க வேண்டி வரும் - சேதாரம் (wastage) என்பது ஒன்று. தங்கத்தை உருக்கி நகையாக செய்யும்போது சில மைக்ரோகிராம்கள் நஷ்டமாகிவிடும்; இந்த இழப்பை நம்மிடமிருந்து பணம் வாங்கி ஈடு செய்து கொள்வார்கள். சேதாரம் என்பது செய்யும் நகையைப் பொறுத்தது. நாம் வாங்கும் கடையையும், அந்தக் கடைக்கு நாம் எவ்வளவு “விசுவாசமானவர்கள்” என்பதையும் பொறுத்தது. 15% லிருந்து 18% வரை சேதாரம் இருக்கக்கூடும். 16 கிராம் எடைக்கு நகை வாங்கினால், 16 கிராமுக்கு 15% ஆன 2.4 கிராம் தங்கத்திற்கு பணம் சேதாரமாக வசூலிக்கப்படும்! அடுத்த குறியீடு “செய்கூலி” (making charges) என்பதாகும். இதுவும் மேற்சொன்ன 3 விஷயங்களையே பொறுத்தது. சாதாரண வேலை

மயிலையே கயிலை, கயிலையே மயிலை

மயிலாப்பூரைப் பற்றிய அறிமுகம் - யாவரும் அறிந்த ஒன்றே. மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாசத்தில் உத்ஸவம் நடைபெறும். இந்த வருஷம், நேற்று (31-03-2009) காலை கொடி ஏற்றப்பட்டது. நாளை (02-04-2009) விடியற்காலை 5-30 மணியளவில் வெள்ளி அதிகார நந்தி யில் ஸ்வாமி புறப்பாடு . 6 ஆம் தேதி திங்களன்று காலை திருத் தேர் . 7 ஆம் தேதி செவ்வாய் பகல் 2-55 க்கு 63-வர் உத்ஸவம் . 9 ஆம் தேதி வியாழனன்று இரவு திருக்கல்யாணம் . பங்குனி உத்ஸவத்திற்காக கோயில் மட்டுமல்ல, கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகளும், மற்ற தெருக்களும் அலங்கரிக்கப் பட்டு, அந்த சுற்றுப்புற சூழ்நிலையே பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது. எல்லாரும் வாருங்கள்; தேரையும், 63-வர் உலாவையும் தரிசித்து, ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீகபாலீஸ்வரரின் அருளை பூரணமாக பெறுங்கள். ராஜப்பா 01-04-2009 இரவு 8-15 மணி பதிவிற்கு பின்னூட்டம். இன்று (02 ஏப்ரல்) காலை 6 மணிக்கு நானும் விஜயாவும் கோயிலுக்குச் சென்றோம். வெள்ளி அதிகார நந்தி வாஹனத்தில் ஸ்ரீ கபாலீஸ்வரரை நன்கு கண்குளிர தரிசித்தோம். கோயில் முழுக்க கூட்டம். பல இடங்களில் கூட்டம் கூட்டமாக பலர