Skip to main content

Posts

Showing posts from September, 2009

விஜயாவின் 60 ஆம் பிறந்த நாள் விழா

ஏற்பாடுகள் குறித்து இங்கு படித்தோம் . இனி விழா. ஞாயிறு, 20-09-09 காலை 11-30 மணிக்கு அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் வந்தனர்; பகல் 3-45க்கு ஸ்ருதி வந்தாள். பூந்தமல்லியிலிருந்து தனியாகவே வந்துவிட்டாள். இரவு 7-30க்கு சாவித்திரி, ரமேஷ், விஜி, கார்த்திக், வசந்த் வந்தனர். வெளியில் சாப்பாட்டிற்கு ஆர்டர் பண்ணியிருந்தோம் - சப்பாத்தி, டால், ஸப்ஜி, சாப்பிட்டு விட்டு, ரமேஷும், விஜியும் வீட்டிற்குத் திரும்பினர். திங்கள், 21-09-2009 விழா. விடியற்காலை 4-30 க்கு நானும், க்ருத்திகாவும் எழுந்துகொண்டோம். பின்னர் விஜயா முதலானோர் ஒவ்வொருவராக எழுந்து, குளித்தனர். 7-45 க்கு இந்திரா, அகிலா, ராஜா, ஜ்யோத்ஸ்னா வந்தனர். காலை டிஃபன் பொங்கல் - க்ருத்திகா பண்ணினாள். சாஸ்திரிகள் 5 பேர் வந்தனர்; 9-15 க்கு ஆரம்பித்தனர். சுகவனம், சுதா, சந்தர், தனுஷ், விஜயராகவன், மாமி, சரோஜா, அத்திம்பேர், ஜெயராமன், கல்யாணி, பூர்ணிமா, மங்களம், சுதன், விஜி, ஜனனி, பாலு மாமா, TSG மாமா, மாமி, பிரகாஷ், ராஜேஸ்வரி, லக்ஷ்மி, மேல்வீட்டு சுரேகா ஆகியோர் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். ஹோமங்கள் 11 மணிக்கு நிறைவடைந்தன.

விஜயாவின் 60-ஆம் பிறந்த நாள் - ஏற்பாடுகள் Vijaya's 60th birthday

விஜயாவின் பிறந்த நாள் 23-09-1949 . இந்த வருஷம் 60 முடிவடைகிறது. நக்ஷத்திர (சித்திரை) பிரகாரம் பிறந்த நாள் செப்டம்பர் 21-ஆம் தேதி வந்தது. அன்று கோயிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு வந்துவிடலாம் என எண்ணியிருந்தோம். விஷயத்தை அறிந்த அருண்-காயத்ரி, அஷோக்-நீரஜா, அர்விந்த்-க்ருத்திகா ஆகியோர் இதை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்தனர். சனிக்கிழமை, 12-09-2009 அன்று சாஸ்திரிகளிடம் கேட்டேன் - ஆயுஷ்ஹோமமும், ம்ருத்யுஞ்ச ஹோமமும் பண்ணலாம் என்றார். சாமான்கள் பட்டியலை தந்தார். ஞாயிறு, 13-09-09 எல்லாருக்கும் நானும், க்ருத்திகாவும் ஃபோன் செய்து அழைத்தோம். அ ன்று மாலை நானும் விஜயாவும் புரசைவாக்கம் ஸ்ரீகிருஷ்ணா கலெக்‌ஷன் கடைக்குச் சென்று அருண், அஷோக், அர்விந்த் மூவருக்கும் ஷர்ட், சதீஷுக்கு ஒரு டி-ஷர்ட், மூன்று குழநதைகளுக்கும் தலா இரண்டு ட்ரெஸ்கள் வாங்கினோம். மொத்தம் 4502.00+1960.00 மறுநாள் (திங்கள், 14-09-2009 ) மத்தியானம் 12 மணிக்கு நான், விஜயா, க்ருத்திகா, அதிதி ஆகியோர் காரில் தி.நகர் சென்றோம்; காயத்ரி அங்கு வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாள். RmKV யில் பார்த்து விட்டு, குமரன் சென்று காய

வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் - கீதை

VELUKKUDI SRI KRISHNAN SWAMIGAL - GITA ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினமும் காலை கீதை உபன்யாஸம் செய்து வருவது யாவருக்கும் தெரியும். 2007, ஜனவரி 18-ஆம் தேதி இதை ஆரம்பித்தார். விஜயாவும், நானும் விடாமல் உபன்யாஸத்தைக் கேட்டு வருகிறோம். இன்று (18-09-2009, வெள்ளிக்கிழமை) 700 -வது நாள். கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளன. இன்றோடு முடிந்திருக்க வேண்டாமா என்ற ஸந்தேஹம் வருவது நியாயமே. ஒவ்வொரு அத்தியாயம் (கீதையில் மொத்தம் 18 அத்தியாயங்கள்) ஆரம்பிக்கும் அல்லது முடிக்கும் போது அந்த அத்தியாயம் குறித்த விசேஷ வ்யாக்யானங்கள் சொன்னதால், இன்னும் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் 29 மீதி உள்ளன. பலமுறை எழுதியது போல, விடியற்காலை 4-30 க்கு எழுந்து, குள்ளக் குளிரக் ”குடைந்து” நீராடி, தூயோமாய் வந்து, வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை மனத்தினால் சிந்தித்து, வாயினால் பாடி, மாமாயன், மாதவன், வைகுந்தனென்றென்று நாமம் பலவும் நவில ... எனக்கு ஒரு மன உறுதியை, த்ருதியை எனக்கு அளித்தது, வேளுக்குடியும், அவரது உபன்யாஸமும், ஸ்ரீகிருஷ்ண பகவானும் தான். தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேன பாரத தத் ப்ராஸாதாத் பராம் சா

மெரீனா கடற்கரை (3)

மெரீனா கடற்கரையில் நடப்பதைப் பற்றி இதுவரை இரண்டு பதிவுகள் எழுதியுள்ளேன்; பின்பு புது ஷூ வாங்கியதையும் எழுதினேன். இன்று (12-09-2009) சனிக்கிழமை காலை 0610 க்கே மெரீனா சென்றேன்; விஜயாவும் வந்தாள். கலங்கரை விளக்கத்திலிருந்து தமி ழர் பண்பாட்டுச் சின்னம் கண்ணகி சிலை வரை 35 நிமிஷங்கள் நடந்தபின்னர் பஸ்ஸில் வீடு திரும்பினோம். ராஜப்பா 12-09-2009 1000 மணி

பல வருஷங்களுக்குப் பிறகு ...

பல வருஷங்களுக்குப் பிறகு - அது இருக்கும் 14,1 5 வருஷங்கள் அல்லது அதற்கும் மேல் - நேற்று (8-9-2009) நான் ஷூ வாங்கினேன் !! நீண்ட நாட்களாகவே தினமும் காலையில் 7 மணிக்கு நடப்பதை (walking) வழக்கமாகக் கொண்டுள்ளேன். சமீபத்தில் மெரீனா கடற்கரையிலும் நடக்க ஆரம்பித்தேன் (என்னுடைய blog படிக்க). என்னைத் தவிர மற்ற எல்லாரும் (10 வயசிலிருந்து 90 வயசு வரை, ஆண்கள் மற்றும் பெண்கள்) மெரீனாவில் நடக்கும் போது காலில் ஷுவுடன் நடப்பதாக என் மனத்தினுள் ஒரு குறுகுறுப்பு. எனவே நானும் ஷூ கட்சியில் சேர்ந்து விட்டேன் - இன்று காலை புது ஷுவுடன் நடந்தேன் !! ராஜப்பா 10:15 மணி 09-09-09

மீண்டும் மெரீனா ...

இன்று (5-9-2009) காலை நான் மீண்டும் மெரீனா கடற்கரை சென்றேன். கலங்கரை விளக்கம் பஸ் நிறுத்தத்தில் ஏழு மணிக்கு இறங்கி, கண்ணகி சிலை வரை நடந்தேன். சரியாக 30 நிமிஷங்கள் ஆகின்றன. இன்று வெயில் அவ்வளவாக இல்லை. நடக்க நன்றாக இருந்தது. கடலும் தகதகவென பிரகாசித்தது. பஸ் பிடித்து வீடு திரும்பினேன். இன்னொரு இனிமையான காலைப் பொழுது. மெரீனா கடற்கரையும், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலும் சென்னைக்கு புகழ் சேர்க்கும் இரண்டு அணிகலன்கள்; இரண்டுமே மயிலாப்பூரில். ராஜப்பா 11:00 மணி, 05-09-2009