VELUKKUDI SRI KRISHNAN SWAMIGAL - GITA
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினமும் காலை கீதை உபன்யாஸம் செய்து வருவது யாவருக்கும் தெரியும்.
2007, ஜனவரி 18-ஆம் தேதி இதை ஆரம்பித்தார். விஜயாவும், நானும் விடாமல் உபன்யாஸத்தைக் கேட்டு வருகிறோம். இன்று (18-09-2009, வெள்ளிக்கிழமை) 700-வது நாள்.
கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளன. இன்றோடு முடிந்திருக்க வேண்டாமா என்ற ஸந்தேஹம் வருவது நியாயமே. ஒவ்வொரு அத்தியாயம் (கீதையில் மொத்தம் 18 அத்தியாயங்கள்) ஆரம்பிக்கும் அல்லது முடிக்கும் போது அந்த அத்தியாயம் குறித்த விசேஷ வ்யாக்யானங்கள் சொன்னதால், இன்னும் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் 29 மீதி உள்ளன.
பலமுறை எழுதியது போல, விடியற்காலை 4-30 க்கு எழுந்து, குள்ளக் குளிரக் ”குடைந்து” நீராடி, தூயோமாய் வந்து, வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை மனத்தினால் சிந்தித்து, வாயினால் பாடி, மாமாயன், மாதவன், வைகுந்தனென்றென்று நாமம் பலவும் நவில ... எனக்கு ஒரு மன உறுதியை, த்ருதியை எனக்கு அளித்தது, வேளுக்குடியும், அவரது உபன்யாஸமும், ஸ்ரீகிருஷ்ண பகவானும் தான்.
தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேன பாரத
தத் ப்ராஸாதாத் பராம் சாந்திம் ஸ்தானம் ப்ராப்யஸி சாச்வதம்
ராஜப்பா
18-09-2009
10:00 மணி

Comments