Skip to main content

மீண்டும் மெரீனா ...

இன்று (5-9-2009) காலை நான் மீண்டும் மெரீனா கடற்கரை சென்றேன். கலங்கரை விளக்கம் பஸ் நிறுத்தத்தில் ஏழு மணிக்கு இறங்கி, கண்ணகி சிலை வரை நடந்தேன். சரியாக 30 நிமிஷங்கள் ஆகின்றன. இன்று வெயில் அவ்வளவாக இல்லை. நடக்க நன்றாக இருந்தது. கடலும் தகதகவென பிரகாசித்தது. பஸ் பிடித்து வீடு திரும்பினேன். இன்னொரு இனிமையான காலைப் பொழுது.

மெரீனா கடற்கரையும், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலும் சென்னைக்கு புகழ் சேர்க்கும் இரண்டு அணிகலன்கள்; இரண்டுமே மயிலாப்பூரில்.

ராஜப்பா
11:00 மணி, 05-09-2009

Comments