இந்தக் குரலை சமீபத்தில் எப்போது கேட்டீர்கள்? பல ஊர்களில் இது முற்றிலுமாக அழிந்துவிட்ட்து என்றே தோன்றுகிறது.
டெக்னாலஜியும் பணச் செழிப்பும் வளர்ந்துள்ள இந்நாட்களில், ”கத்திக்கு சாணை பிடிப்பது என்றால் என்ன,” என்று அதிசயப்படும் ஒரு தலைமுறையே உள்ளது. இப்போதும், சாணை பிடிக்கும் தொழிலாளி தன் உபகரணங்களை தன் கையிலும் முதுகிலுமே தூக்கிக்கொண்டு, எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்று தன் வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறார். ஆண்டாண்டு காலமாக இந்த உபகரணங்களும் மாறவில்லை, தொழிலாளியும் மாறவில்லை. அதே உழைப்பு, அதே வறுமை.
சாணை பிடிக்கும் (கூர் தீட்டும்) வட்ட வடிவமான “சொரசொரப்பு” சக்கரம் (grinding stone), சக்கரத்தை இணைக்க ஒரு பெல்ட், கீழே ஒரு பெரிய சைக்கிள் சக்கரம், இந்த சக்கரத்தைச் சுற்ற ஒரு கால்மிதி (foot pedal). இவ்வளவுதான் உபகரணங்கள். கால்மிதியை அழுத்த அழுத்த, மேலே உள்ள சொரசொரப்பு சக்கரம் வேகமாக சுழல்கிறது. கத்தியின் ஒரு முனையை தன் கட்டை விரலால் அழுத்திக் கொண்டு, கத்தியின் இரண்டு பக்கங்களையும் சுழலும் சக்கரத்தில் ஓட்டினால் நெருப்புப் பொறிகள் பறக்கும். பொறிகள் பறப்பதைப் பார்க்கவே சிறுவர்கள்-சிறுமிகள் கூடுவார்கள்.
ஒரு கத்திக்கு 20 ரூபாய். பெரிய கத்திகளுக்கும், அரிவாள்மணைக்கும் கூடுதல் பணம். இன்றைக்கும் சென்னை மயிலாப்பூரிலும், மந்தைவெளியிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் இரண்டு, மூன்று சாணை பிடிப்பவர்கள் வருகிறார்கள். நாங்களும் அவர்கள் “பிழைக்க” வேண்டுமே என்று கத்திகளை கூர் தீட்டிக் கொள்கிறோம் தேவையில்லாவிட்டால் கூட.
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு?
ராஜப்பா
10:45 மணி 28-10-2009
inspired from an article in today's Indian Express

Comments