சூரபத்மன் என்ற அசுரன் கடுமையான தவம் புரிந்து, “தற்போது இருக்கும் எந்த தெய்வத்தாலும் தான் கொல்லப்படக் கூடாது” என்ற வரத்தைப் பெற்றான். பின்னர் தான் கொல்லப்பட மாட்டோம் என அஹம்பாவம் கொண்டு எல்லா தேவர்களையும் துன்புறுத்த ஆரம்பித்தான். பரமசிவன் இவனை அழிப்பதற்க்காக ஒரு புதிய தெய்வத்தை, தனது ஞானக் கண்ணினால் உருவாக்கினார் - இவர்தான் கந்தன், சுப்பிரமணியம், கார்த்திகேயன், ஆறுமுகம் என பலப் பல பெயர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான். பார்வதி தேவி முருகனுக்கு வீர வேல் வழங்கினார்.
முருகன் சூரபத்மனை எதிர்கொண்டதே கந்த சஷ்டி என்று கொண்டாடப் பெறுகிறது. ஆஸ்வீன (ஆஷாட) மாசத்தில் சுக்ல அமாவாசை முதல் ஆறு நாட்களுக்கு இந்த விழா எல்லா முருகன் கோயில்களிலும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆறு நாட்களிலும் பக்தர்கள் சஷ்டி விரதம் இருப்பார்கள்.
கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகிய அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்ட முருகப்பெருமான், ஆறாம் நாள் சஷ்டியன்று அசுரர்களை அழித்த சூர சம்ஹாரம் நடைபெறும். எல்லா முருகன் கோயில்களிலும் லக்ஷக்கணக்கில் பக்தர்கள் வந்து இதைக் கண்டு களிப்பார்கள். சமுத்திரம், அல்லது வேறு நீர்நிலைகளில் ஸ்நானம் செய்து தங்கள் சஷ்டி விரதத்தை முடிப்பார்கள்.
இந்த வருஷம் (2009, விரோதி வருஷம்) இன்று அக்டோபர் 23 சூர சம்ஹாரம் கொண்டாடப்பெற்றது. திருச்செந்தூரில் நடைபெற்ற சூர சம்ஹாரத்தை “பொதிகை டீவியில்” நேரடி ஒளிபரப்பு மூலம் பார்த்தோம்.
ராஜப்பா
20:10 on 23 Oct

Comments