Sitafal, Ramfal, Custard Apple, Sugar apple எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் ஸீதாப்பழம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பழம். எனக்கு மட்டுமல்ல, விஜயா, அருண், அஷோக், அர்விந்த் எல்லாருக்குமே மிகப் பிடித்தது.
ஆந்திர மாநிலத்தில் இப்பழம் நிறைய விளைகிறது. பெரும்பாலான ஆந்திரமக்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். நாங்கள் 27 வருஷங்களுக்கும் மேலாக் ஹைதராபாதில் வாழ்ந்தபடியால் எங்களுக்கும் பிடித்து விட்டது. ஹைதராபாதில் ஸீதாப்பழம் கொட்டி கொட்டி கிடைக்கும். பெங்களூரிலும் இது நிறைய கிடைக்கும். தமிழ்நாட்டில் இது கிடைப்பது அரிது.
ஹைதராபாதில் ”ஸீதாஃபல் மண்டி” என்றே ஒரு இடம் அழைக்கப்படுகிறது. 1990-91 என நினைக்கிறேன் - என்னுடைய அசிஸ்டெண்டிடம் “மண்டியிலிருந்து கொஞ்சம் ஸீதாப்பழம் வாங்கி” வரச் சொன்னேன். சனிக்கிழமை காலை அவனும் வாங்கி வந்தான் - திகைத்து விட்டோம்! நம்பினால் நம்புங்கள், ஒரு பெரிய கோணிப்பை நிறைய - 150-200 பழங்கள் இருக்கும் - வாங்கி வந்தான். “மிக மலிவு” என்று சமாதானம் சொன்னான். ஆனால், சாப்பிட்டு முடித்து விட்டோம்.
பழம் இனிப்பாக இருக்கும்; கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை நிற “சுளைகளை” மென்று விட்டு, உள்ளே இருக்கும் கறுப்பு நிற கொட்டைகளை துப்பி விட வேண்டும். இரண்டு வருஷங்களுக்கு முன்பு பம்பாய் தாணேயில் ஸீதாப்பழ ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். ஸீதாப்பழத்தில் நிறைய சத்துக்கள் உள்ளன.
ராஜப்பா
20:40
23 Oct 2009

Comments