Skip to main content

Posts

Showing posts from November, 2009

காலை நடைப் பயிற்சி

மழை காரணமாக சென்ற ஆறு நாட்களாக காலையில் நடைப் பயிற்சி போக முடியவில்லை; நேற்றுதான் மீண்டும் ஆரம்பித்தேன். ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடித்தேன். இன்று (11-11-2009) காலை இந்த புதிய இடத்திற்கு சென்றேன்; வீட்டிலிருந்து 12 நிமிஷ தூரத்தில், RA Puram சாந்தோம் நெடுஞ்சாலையில் பட்டினப்பாக்கம் (Foreshore Estate) போகும் வழியில் உள்ளது. CENTRAL INSTITUTE OF BRACKISH WATER AQUACULTURE   (brackish water  = having somewhat a salty taste from a mixture of seawater and fresh water) , a UN-supported FAO institute for fish, prawns and shrimp culture, managed by Indian Council of Agricultural Research . நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 300 மீட்டர் உள்ளே ஆஃபீஸ் இருக்கிறது. இந்த 300 மீட்டர் தூரத்திற்கும் மிக அழகான, சுத்தமான, இருவழி தார் ரோடு போடப்பட்டுள்ளது. நடுவில் median ம், ஓரங்களில் அழகிய 4 அடி அகல நடைபாதைகளும் உள்ளன. சாலையின் இரு பக்கங்களிலும் நிறைய வேப்ப மரங்கள்; நிறைய செடி, கொடிகள். ஜன சந்தடி கிடையாது, பஸ், கார்கள் இரைச்சலும் கிடையாது. காலை வேளையின் இனிமையான இதமான சூழலும், வேப்பங்காற்று தரும் புத்துணர

Srimad Bhagavatham ஸ்ரீமத் பாகவதம் - வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று (9-11-2009, திங்கட்கிழமை) காலை பொதிகை டீவியில் “கண்ணனின் கதையமுதம்” என்ற தலைப்பில் ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸம் துவங்கினார். காலை 6-30க்கு. இது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அவர் குறிப்பிட்டார். வேதத்தை விளக்க ஸ்ரீராமாயணம், மஹாபாரதம் என்னும் இரண்டு இதிஹாசங்களும், பதினெட்டு புராணங்களும் உள்ளன. புராணம் என்றால் காலத்தால் பழமையாக இருந்தாலும் கருத்தால் எப்பொழுதும் புதிதாக இருக்கும்.புரா + அபி + நவம். கதை நடந்த காலத்திற்கு மிக பின்னால் எழுதப்பட்டவை புராணங்கள். ஆனால், இதிஹாசங்கள் கதை நடந்தபோதே எழுதப்பட்டவை. ஸ்ரீமத் பாகவத புராணத்தை வ்யாசர் எழுதினார். மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களையும் அவற்றில் வரும் பல கதைகளையும் அடக்கியது.   ஸ்ரீ சுகாசார்யர் இதை பரீக்ஷித் மஹாராஜாவிற்கு ஏழு நாட்களில் உபதேசித்தார். ப்ரஹ்மாவின் குமாரர் வசிஷ்டர் -- சக்தி -- பராசரர் -- வ்யாஸர் -- ஸ்ரீ சுகர் இது வசிஷ்டரின் வம்ஸாவளி. மொத்தம் 12 ஸ்கந்தங்கள் (அத்தியாயங்கள்). பிறப்பின் மூலத்தை முதல் ஸ்கந்தத்தில் ஆரம்பித்து, பிரளயம், கலிகாலத்துடன் 12ம் ஸ்கந்தம் முடிவுறுகிறது. இட

ஸ்ரீமத் பகவத் கீதை - வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

கீதை உபன்யாஸம் இன்றோடு (6-11-2009, வெள்ளிக்கிழமை) நிறைவு பெற்றது. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சுமார் 3 வருஷங்களாக் 735 உபன்யாஸங்கள் செய்தார். 18 அத்தியாயங்கள், 700 ஸ்லோகங்கள். யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தர: | தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மம || rajappa 10:50 AM on 6 Nov 2009

இருட்டுக் கடை ஹல்வா

புகழ்பெற்ற ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலுக்கு நேர் எதிரில், கீழ தேரடி வீதியில் திருநெல்வேலியின் இருட்டுக் கடை ஹல்வா கடை உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுதும் பெயர் பெற்ற கடை. ராஜஸ்தானத்திலிருந்து வந்த ஒரு குடும்பத்தினரால் 90 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பெற்றது. இன்றைக்கும் இந்தக் குடும்பத்தின் வழி வந்தவர்களே கடையை நிர்வகிக்கின்றனர். மாலை 5 மணிக்குத்தான் கடை திறக்கும்; இரவு 10 மணிக்கு மூடிவிடுவார்கள். ஒளி தர எண்ணெய் விளக்குகள் மட்டுமே. “இருட்டுக் கடை” என்ற பெயர் வந்ததே இதனால்தான். கடை இருட்டாக இருக்கலாம்; ஆனால், ஹல்வாவின் ருசியும் மணமும்! எப்பொழுதும் நிரம்பி வழியும் கூட்டமே இதற்கு சாட்சி. கடையின் வெளியில் ஒரு சின்ன போர்டு கூடக் கிடையாது. ஆனாலும் கூட்டத்திற்கு என்னவோ குறைவே இருக்காது. பல கோடி ரூபாய்களை விளம்பரத்திற்காக செலவிடும் MNCக்கள் இந்தக்க் கடையை Marketing Study பண்ணவேண்டும். 2003ல் (சுபா - மகேஷ் திருமணத்திற்கு முன்பு) நான் தி-வேலி சென்று Mr ராஜாமணி அவர்கள் (மகேஷின் அப்பா) வீட்டில் தங்கியபோது முதல்முறையாக இருட்டுக் கடை ஹல்வா கடைக்குச் சென்றேன். 1/2 கிலோ ஹல்வா வாங்கியதாக ஞாபக

வெந்தயக் கீரை சாம்பார்

நேற்று காலை வெந்தயக்கீரை (Methi) வாங்கினேன். ” யானை விலை, குதிரை விலை ” என்று சொல்வார்களே, அதை திருத்தி, “ வாழை விலை, வெந்தயக்கீரை விலை ” என இனி சொல்லவேண்டும். ஒரு கட்டு ரூ. 13/- !! (வாழைக்காய் 6/-) கீரையை ஆய்ந்து, நறுக்கி சாம்பார் பண்ணினோம். சுடச்சுட சாம்பாரும், சப்பாத்தியும் தான் இன்றைய லஞ்ச். இந்த கூட்டணி எனக்கு மிகவும் பிடித்தமானது. ரசித்து, ருசித்து சாப்பிட்டேன். வெந்தயக்கீரை சாம்பார் செய்முறை எனக்குத் தெரியாது. வெந்தயக்கீரை சாதம் பற்றிய செய்முறை இங்கு படிக்கவும் (ராஜி-வாசு எழுதியது) ராஜப்பா 5-11-2009 9-05 AM

குருக்ஷேத்திரம் - ஸ்ரீமத் பகவத்கீதை

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் முன்னோரான குரு என்னும் மஹாராஜா இந்த ஊருக்கு வந்து அஷ்ட குணா வித்துக்களை விதைக்க ஆசைப்பட்டார். மனிதனுக்கு நல்லது சொல்லி, அவனை பகவானிடம் சேர்க்க, இந்த எட்டு நற்குணங்களும் தேவை என அவர் உறுதியாக நம்பினார். தபசு (உடலையும், உள்ளத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்), தயா (எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல்), க்ஷமா (எல்லாரிடத்திலும் பொறுமை காத்தல்), சௌசம் (மனதிலும், உடலிலும், வாக்கிலும் தூய்மை), தானம் (தனக்கு உபயோகமாயிருப்பதை தேவையான பிறருக்கு தானமாக தருதல்), ஸத்யம் (எப்போழுதும் உண்மையே பேசுவது), யக்ஜம் (ஸாஸ்திரம் சொல்லியுள்ள கர்மங்களை தினமும் செய்வது), ப்ரஹ்மசரியம் , ஆகியவையே இந்த எட்டு குணங்கள். இவரது குறிக்கோளை அறிந்து, மனமகிழ்ச்சி அடைந்த பகவான், இந்த ஊரே உன் பெயரால் இன்றுமுதல் குருக்ஷேத்திரம் என அழைக்கப்படும் என்று அருளினார். இங்குதான் மஹாபாரத யுத்தம் நிகழ்ந்தது; ஸ்ரீமத் பகவத் கீதையும், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமமும் இங்குதான் அருளப்பட்டன. ” தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ---” என்று துவங்கும் கீதையின் முதல் ஸ்லோகத்துடன் சுமார் மூன்று வருஷங்களுக்