பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் முன்னோரான குரு என்னும் மஹாராஜா இந்த ஊருக்கு வந்து அஷ்ட குணா வித்துக்களை விதைக்க ஆசைப்பட்டார். மனிதனுக்கு நல்லது சொல்லி, அவனை பகவானிடம் சேர்க்க, இந்த எட்டு நற்குணங்களும் தேவை என அவர் உறுதியாக நம்பினார்.
தபசு (உடலையும், உள்ளத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்), தயா (எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல்), க்ஷமா (எல்லாரிடத்திலும் பொறுமை காத்தல்), சௌசம் (மனதிலும், உடலிலும், வாக்கிலும் தூய்மை), தானம் (தனக்கு உபயோகமாயிருப்பதை தேவையான பிறருக்கு தானமாக தருதல்), ஸத்யம் (எப்போழுதும் உண்மையே பேசுவது), யக்ஜம் (ஸாஸ்திரம் சொல்லியுள்ள கர்மங்களை தினமும் செய்வது), ப்ரஹ்மசரியம், ஆகியவையே இந்த எட்டு குணங்கள்.
இவரது குறிக்கோளை அறிந்து, மனமகிழ்ச்சி அடைந்த பகவான், இந்த ஊரே உன் பெயரால் இன்றுமுதல் குருக்ஷேத்திரம் என அழைக்கப்படும் என்று அருளினார். இங்குதான் மஹாபாரத யுத்தம் நிகழ்ந்தது; ஸ்ரீமத் பகவத் கீதையும், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமமும் இங்குதான் அருளப்பட்டன.
”தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ---” என்று துவங்கும் கீதையின் முதல் ஸ்லோகத்துடன் சுமார் மூன்று வருஷங்களுக்கு முன்பு கீதை உபன்யாசத்தை ஆரம்பித்த ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன், இன்று (2-11-2009) கீதையின் இறுதி பாகத்தை குருக்ஷேத்திரத்திலேயே தொடங்கினார்.
எல்லாரும் இதைக் கேட்டு பகவான் அருளைப் பெற ஆசைப்படுகிறேன்; காலை 6-30 மணிக்கு பொதிகையில். முயற்சி செய்யுங்கள்; ஸ்ரீ கிருஷ்ணன் அருள் கிட்டட்டும்.
ராஜப்பா
இரவு 8-45 மணி
2-11-2009

Comments