ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் இன்று (9-11-2009, திங்கட்கிழமை) காலை பொதிகை டீவியில் “கண்ணனின் கதையமுதம்” என்ற தலைப்பில் ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸம் துவங்கினார். காலை 6-30க்கு. இது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
வேதத்தை விளக்க ஸ்ரீராமாயணம், மஹாபாரதம் என்னும் இரண்டு இதிஹாசங்களும், பதினெட்டு புராணங்களும் உள்ளன. புராணம் என்றால் காலத்தால் பழமையாக இருந்தாலும் கருத்தால் எப்பொழுதும் புதிதாக இருக்கும்.புரா + அபி + நவம். கதை நடந்த காலத்திற்கு மிக பின்னால் எழுதப்பட்டவை புராணங்கள். ஆனால், இதிஹாசங்கள் கதை நடந்தபோதே எழுதப்பட்டவை.
ஸ்ரீமத் பாகவத புராணத்தை வ்யாசர் எழுதினார். மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களையும் அவற்றில் வரும் பல கதைகளையும் அடக்கியது. ஸ்ரீ சுகாசார்யர் இதை பரீக்ஷித் மஹாராஜாவிற்கு ஏழு நாட்களில் உபதேசித்தார். ப்ரஹ்மாவின் குமாரர் வசிஷ்டர் -- சக்தி -- பராசரர் -- வ்யாஸர் -- ஸ்ரீ சுகர் இது வசிஷ்டரின் வம்ஸாவளி.
மொத்தம் 12 ஸ்கந்தங்கள் (அத்தியாயங்கள்). பிறப்பின் மூலத்தை முதல் ஸ்கந்தத்தில் ஆரம்பித்து, பிரளயம், கலிகாலத்துடன் 12ம் ஸ்கந்தம் முடிவுறுகிறது. இடையில் தசாவதாரங்கள் குறித்து விவரமான விளக்கம்.
ராஜப்பா
10:50 மணி
9-11-2009

Comments
Continue