மெரீனா பீச் போக மே மாதம் 8ஆம் தேதியன்று நான் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பிசுபிசுத்துப் போனது. இங்கு படிக்கவும் அடுத்த முயற்சியாக நேற்று (25 மே) மாலை மீண்டும் பஸ் நிறுத்தத்தில் 1/2 மணி நேரம் நின்றோம். நொந்து போய், வீடு திரும்ப பத்து அடிகள் எடுத்து வைத்தபோது 21-D வந்தது, அதுவும் காலியாக. அரைமணி நேரத்தில் நாங்கள் ராணி மேரிக் கல்லூரி வாசலில் இருந்தோம். காமராஜர் சாலையை (Beach Road) குறுக்காக கடந்து பீச் பக்கம் போய் நடக்க ஆரம்பித்தோம். மிகவும் அழகிய, சுத்தமான நடைபாதை பளபளத்தது. இரண்டு கிமீ நடந்த பின்னர் கொஞ்சம் உட்கார்ந்தோம். கண்ணகி சிலை நிறுத்தத்தில் பஸ் பிடித்து வீடு திரும்பினோம். மெரீனா பீச் நிஜமாலுமே மிக அழகாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. துணை முதல்வர் திரு ஸ்டாலினுக்கு நன்றிகள். LightHouse-லிருந்து சிவானந்தா சாலை வரை (அல்லது அதையும் தாண்டி) பளபளக்கும் நடைபாதை உள்ளது. உட்கார, குழந்தைகள் ஓடியாடி விளையாட நிறைய இடங்கள் இருக்கின்றன. நீணட நெடிய புல்தரைகள் பச்சைக் கம்பளமாக விரிந்திருக்கின்றன. நீங்களும் போய்ப் பாருங்கள். ராஜப்பா 10 மணி 26-05-2010