காலை வேளையில், ஏழு மணி சுமாருக்கு, வங்கக் கடலை பார்த்திருக்கிறீர்களா?
சூரியன் கிழக்கே உதித்து, சிறிதே மேல் எழும்பி தன்னுடைய பொன்னிறக் கிரணங்களை தண்ணீர் மேல் அள்ளித் தெளித்திருப்பான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மொத்த நீர்ப் பரப்பும் சூரிய ஒளி பட்டு, தகத் தகவென தங்கத் தாம்பாளமாக, பளபளக்கும் வெள்ளித் தட்டாக காட்சி அளிக்கும் - இந்த அழகு மனதை அள்ளிக் கொண்டு போகும்.
தினந்தோறும் காலை நான் இந்த கண்கொள்ளா இயற்கை அழகை ரசித்து, எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என அவனுக்கு நன்றி சொல்கிறேன்.
ராஜப்பா
காலை 10:30 மணி
04-05-2010

Comments
Either make it as a separate example. It's good
சூரியன் எழும்போது (உதிக்கும் போது) பொன்னிறமாக காட்சியளிப்பான் என்பதும், சிறிது மேலே வந்தபிறகு அவனது பொன்னிறம் வெள்ளி நிறமாக மாறிவிடும் என்பதும் தாங்கள் அறியாததல்ல.
Thanks,
Anony