இயற்கையின் கொள்ளை அழகை (விரிந்து பரந்த வங்கக்கடலை வர்ணித்து) போனமுறை எழுதியிருந்தேன். இன்று (19-5-2010) இயற்கையின் இன்னொரு அழகிய பக்கத்தைப் பற்றி ...
நேற்று முதல் கடலில் காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதாகவும், அதனால் சென்னையில் பலத்த மழையும், காற்றும் இருக்குமென சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இரவு முழுதும் பெரிய தூற்றல்களாக மழை பெய்து கொண்டேயிருந்தது. காலையில் “ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து” ஊரே இருட்டாக இருந்தது. மழையும் இருந்தது.
காலை 6 1/2 மணிக்கு விஜயாவும் நானும் மழையிலேயே குடை பிடித்துக் கொண்டு கிளம்பினோம். பீச் பக்கம் சென்றால், அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டு உயரம் உயரமாக எழும்பிக் கொண்டிருந்தன.
தண்ணீர் அருகில் சென்றோம். நாங்கள் இருவர் மட்டுமே அங்கு இருந்தோம். ஆர்ப்பரிக்கும் அலைகளைப் பார்க்க பார்க்க, மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆள் உயரத்திற்கு அல்லது இரண்டு ஆள் உயரத்திற்கு அலைகள் எழும்பின.
இதுவரை சாதுவாக, அலையின் ஓசையே அதிகம் கேட்காமல், மென்மையாகத் “தளும்பிக்” கொண்டிருந்த கடலா இது? என்ன ஒரு மாற்றம்! இயறகையின் இன்னொரு பக்கமும் அழகுதான்.
பத்து நிமிஷங்கள் இயற்கையை - மழை கொட்டிக் கொண்டிருக்கும் போது - ரசித்து விட்டு, பீச் ரோடில் கொஞ்ச தூரம் நடந்த பின்னர் வீடு திரும்பினோம்.
ராஜப்பா
07:45 காலை
19-05-2010

Comments
cyclone. the sea rises upto 20 or 30 feet, with water spraying all over the ship. the ship is made to roll and pitch, according to the direction of the wind. sometimes, the sea water passes from one side of the ship to the other. nature is at is best there, playing havoc...
English Poet John Keats says have you ever the sound of flower blossoms. It's same as the famous Tamil lyrics 'Poo Pookkum Osai athai kekka than asai'. I can remember your blog also with these line.
Thanks uncle for your good blog. Please keep continue writing good blogs.