மயிலாப்பூரில் சம்ஸ்கிருத காலேஜுக்குப் பின்னால் இந்த மாதவப் பெருமாள் கோயில் உள்ளது. 500 வருஷங்களுக்கும் மேல் புராதனமான, கீர்த்தி வாய்ந்த, அழகான கோயில்.
கோயிலுக்குப் போய் ஒன்றிரண்டு வருஷங்கள் ஓடிவிட்டன. போக வேண்டும் என தினமும் நினைத்துக் கொள்வேன்; கடைசியில், ஆறு நாட்களுக்கு முன்னால் ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை இந்த மாதவனை தரிஸிக்க சென்றோம்.
மூலவர் : மாதவப் பெருமாள்.
உற்சவர் : அர்விந்த மாதவன்.
தாயார் : அமிர்தவல்லி தாயார்.
கோயிலில் பூவராஹன், ஆண்டாள், ராமர், பால ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. பெருமாளையும், தாயாரையும் கண்குளிர தரிஸித்து ஆனந்தமடைந்தோம். உற்சவப் பெருமாள் என்ன அழகு!
இந்தக் கோயிலின் பக்கத்திலேயே பிரசித்தி பெற்ற ஸ்ரீ முண்டகக் கண்ணி அம்மன் கோயில் உள்ளது. மிக சக்தி வாய்ந்த அம்மன். கோயிலுக்கு போய் அம்மனை தரிஸித்தோம். அன்று காலை 1008 பால்குடம் எடுத்து விழா நடந்தது (அன்று சித்ரா பௌர்ணமி).
“வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை,” இருவரில் மாதவனை தரிஸித்தாயிற்று; அடுத்து கேசவன். (மயிலாப்பூரிலேயே கோயில் உள்ளது).
ராஜப்பா
காலை 10:00 மணி
04-05-2010

Comments