11-வது ஸ்கந்தம் இன்று (17-11-2011) காலை துவங்கியது. இது 31 அத்தியாயங்கள் அடங்கியது.
இந்த 11-ஆம் ஸ்கந்தம் முதல் அத்தியாயத்தில் யது குலம் அழியப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் சொல்லப்படுகின்றன. குருக்ஷேத்திர யுத்தத்தில் பல பேரை அழித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன், இப்போது கர்வமும் திமிரும் படைத்த தன்னுடைய யது குலத்தையே அழிக்க திருவுள்ளம் கொண்டார்.
யதுகுல சிறுவர்கள் எப்படி சாம்பா என்னும் சிறுவனை ஒரு பிள்ளைத்தாய்ச்சி பெண் போல நடிக்க வைத்து ரிஷிகளை ஏமாற்ற நினைத்தார்கள், விஸ்வாமித்ரா, அசிதா,கண்வா, துர்வாஸா, ப்ருகு, ஆங்கீரா, காஷ்யபா, வாமதேவா. அத்ரி, வஸிஷ்டா ஆகிய ரிஷிகள் கோபமடைந்து எப்படி ”ஒரு உலக்கையினால் உங்கள் யதுகுலமே நாசமாகும்,” என சபித்தார்கள், எப்படி உலக்கை யதுகுலத்தையும் ஸ்ரீகிருஷ்ணனையும் முடித்தது என்பதை முதல் அத்தியாயம் விளக்குகிறது [11:01]
11:02 நாரதர் வசுதேவருக்கு பாகவத தர்மத்தை விளக்குகிறார். விதேஹ நாட்டு மஹாராஜா நிமி ஒன்பது யோகேந்திரர்களிடம் “பாகவத தர்மத்தை” விளக்கிச் சொல்லுமாறு வேண்ட, ஒவ்வொரு ரிஷியாக தர்மத்தைப் பற்றி சொல்லுகிறார்கள்.
11:03 இதில் பகவானின் மாயா குறித்து விவரமாக மஹாராஜா நிமிக்கு சொல்லப்படுகிறது. கர்ம யோகமும் விளக்கப்படுகிறது.
11:04 பகவானின் பல்வேறு அவதாரங்கள் பற்றி சொல்லப்படுகிறது. ஹமஸா, தத்ராத்ரேயா, ஸனக குமாரர்கள், ரிஷபதேவா, ஹயக்ரீவா அவதாரங்கள் சொல்லப்ப்டுகின்றன.
வராஹனாக அவதரித்து ஹிரண்யாக்ஷனை அழித்தது; கூர்மனாக மந்தர மலையை தூக்கியது; நரஸிம்ஹனாக ஹிரண்யகஸிபுவை அழித்தது; வாமன ரூபத்தில் பலி மஹாராஜவை முடித்தது; பரஸுராமனாக் க்ஷத்திரயர்களை 21 முறை அழித்தது; ஸ்ரீராமனாக ராவணனை அழித்தது; ஸ்ரீகிருஷ்ணனாக கௌரவர்களையும் யதுகுலத்தையும் முடித்தது; இன்னும் புத்த மற்றும் கல்கி அவதாரங்களைப் பற்றியும் விவரமாக மஹாராஜா நிமிக்கு சொல்லப்படுகிறது.
11:05 நான்கு வருணங்கள் மற்றும் நான்கு யுகங்களில் பகவானின் விசேஷங்கள் விளக்கப்படுகின்றன. இத்துடன் வஸுதேவருக்கு நாரதர் சொன்னவை முடிவுறுகின்றன.
11வது ஸ்கந்தம் தொடரும்.
ராஜப்பா
29-01-2012
காலை 9 மணி

Comments