நேற்று மாலை (22-ஜனவரி) நாங்கள் மெரீனா கடற்கரை சென்றோம். திருவான்மியூரில் பஸ்ஸுக்காக 20-25 நிமிஷங்கள் காக்க வேண்டியிருந்தது. இங்கிருந்து திருவல்லிக்கேணி உழைப்பாளர் சிலை வரை பஸ் டிக்கெட் ரூ 13.00 . அங்கு இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சமீபத்தில் நெருப்புக்கு இரையான சேப்பாக் அரண்மனை - தற்போது ”எழிலகம்” - இருளில் மூழ்கியிருந்தது.
இன்னும் 4 நாளில் வர இருக்கும் குடியரசு தின விழாவிற்காக காந்திஜி “எண்ணெய் தேய்த்து குளித்து” பளபள என ஜொலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. “செந்தமிழ் நாடெனும் போதினிலே ...” பாட்டு எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.
ராணி மேரிக் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறி வீடு திரும்பினோம். Queen Mary என எழுதுவதற்கு பதிலாக Queen MARRY" என பஸ் நிறுத்தத்தில் எழுதியிருக்கிறார்கள்.
ராஜப்பா
08:30 AM
23 Jan 2012
உழைப்பாளர் சிலை
மெரீனா கடற்கரை மிக ரம்மியமாக, அழகாக இருக்கிறது. ஒரு பக்கம் வங்கக்கடல், இன்னொரு பக்கம் 300 வருஷ தொன்மையான வரலாற்றுப் புகழ்பெற்ற கட்டிடங்கள். நடக்க பளபளக்கும் நடைபாதை. எங்கும் ஒளி வெள்ளம். ஓ, மெரீனாவின் அழகே தனிச் சிறப்புதான். அதுவும் நேற்று மெல்லிய குளிர் காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.
விவேகானந்தர் இல்லத்திற்கு (ICE HOUSE) எதிரில் 15 நிமிஷங்கள் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் அலைகளை ரசித்தோம். பின்னர் காந்திஜி சிலை நோக்கி நடந்தோம்.
VIVEKANANDAR ILLAM [ICE HOUSE]
ராணி மேரிக் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறி வீடு திரும்பினோம். Queen Mary என எழுதுவதற்கு பதிலாக Queen MARRY" என பஸ் நிறுத்தத்தில் எழுதியிருக்கிறார்கள்.
Queen Mary's College
இரண்டு மணி நேரம் மிக இனிமையாக கழிந்தது.ராஜப்பா
08:30 AM
23 Jan 2012
Comments