இந்த 2012 ஆம் வருஷம் ஜனவரி 15 ஆம் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை வந்தது. காலை 0840 முதல் 0940 வரை பொங்கல் பானை வைக்க சிறந்த நேரம் என்று படித்தேன். முதல் நாளே காய்கறிகளும், கரும்பும் (ஒரு ஜோடி வலை ரூ50), இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்தும், மாவிலையும் வாங்கி விட்டோம்.
பொங்கலன்று காலை கிருத்திகாவும், விஜயாவும் எல்லாவற்றையும் தயார் பண்ணி, மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்றோம். அதிதி புது பாவாடையில் ஜொலித்தாள்; நிறைய வேலைகள் ஓடி ஓடி செய்தாள். 1115க்கு விஜயா கற்பூரம் ஏற்றினாள். சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல், வடை ஆகியவை நிவேதனம் செய்யப்ப்ட்டன.
முதல் நாள் (சனிக்கிழமை) போகியையும் சிறப்பாக கொண்டாடினோம். அன்று பால் போளி, வடை பண்ணினோம்.
புது, சொந்த வீட்டில் நடக்கும் முதல் பொங்கல் இது.
ராஜப்பா
11:30 காலை
16-01-2012

Comments