ஏப்ரல் 10, 2012 செவ்வாய்க்கிழமை தெருவில் திடீரென விழுந்ததையும் ஸ்வரம் ஹாஸ்பிடலில் ஒருநாள் இருந்ததையும் “ALL NORMAL, ஒன்றும் இல்லை” என டாக்டர்கள் சொன்னதையும் முன்பே எழுதினேன்.11-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்தனர்.
12-ஆம் தேதி காலை CGHS சென்றோம். டெஸ்ட் ரிசல்ட்டுகளை பரிசீலித்து விட்டு, “ஒன்றும் இல்லை” என இந்த டாக்டரும் (டாக்டர் பார்த்தஸாரதி) சொன்னார். Aspirin Tablet STROMIX கொடுத்தார். ஏப்ரல் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) டாக்டர் மாதவனிடம் சென்று காண்பித்தோம். அவரும் ஒன்றுமில்லை எனக் கூறினார்.
ஒரு CT Scan of Brain (plain) எடுத்து வரும்படி சொன்னார். மீண்டும் CGHS இந்திராநகர் 23ஆம் தேதி சென்று, அந்த டாக்டர் மூலமாக scanக்கு PRECISON DIAGONOSTIC LAB, MG ROADற்கு சீட்டு வாங்கிவந்தோம். CGHS மூலமாக் சென்றால் எல்லாம் இலவசம் - சுமார் 3300.00 ரூ மிச்சம் !
ஏப்ரல் 25, 2012 புதன்கிழமை காலை 10 மணி சுமாருக்கு காரில் விஜயாவும் நானும் PRECISION Labற்கு சென்றோம்; அரை மணி கழித்து என்னை Scan அறைக்கு அழைத்தனர். படுக்க வைத்து BRAIN SCAN பண்ணினார்கள். 10 நிமிஷத்தில் முடிந்தது. 11-45க்கு காரில் வீடு திரும்பினோம். சாயங்காலம் 5 மணிக்கு விஜயா சென்று ரிப்போர்ட் வாங்கிவந்தாள்.
இந்த ரிப்போர்ட்டுடன் டாக்டர் மாதவனை மாலை 7-30க்கு பார்த்தோம். எல்லாம் நார்மல் எனக் கூறிய டாக்டர் மாதவன், என்னை அதிக ஜாக்கிரதையுடன் இருக்கும்படி சொன்னார். சில மாதங்களுக்கு, தனியாக எங்கும் போகவேண்டாம், எப்போதும் யார் துணையோடு போக வேண்டும் என சொன்னார். ஒரு முன் ஜாக்கிரதை (Pre-Caution) என்றார். Lead a Routine Life, Resume all your Normal workload, You Are Fine, he said.
ஏப்ரல் 14 முதலே என்னுடைய வழக்கமான் வேலைகளை தொடங்கினேன். காலை 4-15க்கு எழுந்திருப்பதை மாற்றி. 5-15 அல்லது 5-30க்கு எழுந்து குளிக்கிறேன். பாராயணங்கள் முழுதும் சொல்வதில்லை. காய்கறி மார்க்கெட்டிற்கு இப்போது விஜயா என்னுடன் துணை வருகிறாள். STROMIX aspirin Tablet தொடர்கிறது.
எல்லாம் ஆண்டவன் அருள். அவனுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.
ராஜப்பா
மாலை 6 மணி
26-4-2012
Comments