ஏப்ரல் 10, 2012 செவ்வாயன்று ரோடில் கீழே விழுந்ததையும், Brain Scan பண்ணிக் கொண்டதையும் முன்பு எழுதினேன். காலை 4-15க்கு எழுந்திருப்பதை 5-30 என மாற்றிக் கொண்டதையும் குறிப்பிட்டேன் இப்போது, ஆகஸ்ட் 18 (சனிக்கிழமை) 5-15க்கும், 19ஆம் தேதி 5 மணிக்கும், 20 ஆம் தேதி முதல் மீண்டும் 4-15க்கும் எழுந்து கொள்ள ஆரம்பித்துள்ளேன். முழு பாராயணங்களும் சொல்ல ஆரம்பித்து விட்டேன். ஏப்ரல் 11 முதல், ஆகஸ்ட் 20 வரை 4 மாசங்களாக நிறுத்தியிருந்தேன்.
ஆகஸ்ட் 23 (வியாழன்) முதல் காலை 6-50க்கு மொட்டை மாடிக்கு (Terrace) க்குச் சென்று காலை-சூரிய கிரணத்தில் புதிதாக வேறு பல் பாராயணங்களை சொல்கிறேன். 1/2 மணி நேரத்திற்கு பிறகு அங்கே 30 நிமிஷம் நடக்கிறேன். சுமார் 8 மணிக்கு கீழே வருகிறேன்.
விடியற்காலம் 5-30க்கு பாலிற்காக கீழே ஒரு மாடி இறங்கி ஏறுவதையும், பின்னர் 6-50க்கு Sun-Bathற்கு மொட்டை மாடி (இரண்டு மாடிகள்) ஏறி இறங்குவதையும் LIFT உபயோகிக்காமல், படி ஏறி இறங்குகிறேன். மூன்று நாட்களாக இன்னொரு வேலையும் செய்கிறேன் - மொட்டை மாடியில் உள்ள 10-12 செடித் தொட்டிகளுக்கு தண்ணீர் விடுகிறேன். இது என்னுடைய DREAM Hobby.
காலை 4-30 முதல் 8 மணி வரை மிக உபயோகமாக பொழுது போகிறது. எல்லாம் அவன் அருள்.
ராஜப்பா
6:50 மாலை
04 செப்டம்பர் 2012
Comments