இந்த வருஷம் (2010-11) மார்கழி மாதம் டிசம்பர் 16-ஆம் தேதியன்று துவங்கியது. அன்று தொடக்கம் நானும் விஜயாவும் தினம் தினம் விடியற்காலையில் எழுந்து, குளித்து கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனையும், விநாயகரையும், மற்ற தெய்வங்களையும் நமஸ்கரித்து வருகிறோம்.
மார்கழி மொத்தம் 30 நாட்களில், 4 நாட்கள்தான் கோயிலுக்கு. போக இயலவில்லை. பெரும்பாலான நாட்களில் சுடச்சுட வெண்பொங்கல் / சக்கரைப் பொங்கல் பிரஸாதம் கிடைக்கப் பெற்றோம்.
இந்த வருஷம் சென்னையில் குளிர் (வழக்கத்தைவிட) கொஞ்சம் அதிகம். அந்தக் “குளிரில்” நடந்து செல்வதே மிகப் பெரிய இனிய அனுபவமாக இருந்தது.
இன்றோடு (ஜன 14) மார்கழி நிறைவு பெறுகிறது. இரவு 8-30 மணி சுமாருக்கு தை பிறக்கிறது. இனி கோயில்கள் வெறிச்சோடி இருக்கும், ஸ்வாமிக்கு அபிஷேகம் முதலானவை தாமதமாகத்தான் நடக்கும்.
எல்லாருக்கும் மனங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காமல் விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருக இந்த மார்கழியில் எங்களை ஆசீர்வதித்தது போலவே, மீண்டும் அடுத்த வருஷமும் அதற்குப் பின்பும், இதே போன்று மார்கழியில் விடியற்காலையில் எழுந்து இறைவனை சேவித்து நமஸ்கரிக்க எங்களுக்கு ஆரோக்கியம் அருள அந்த மாதவனை கேஸவனை பிரார்த்திக்கிறேன். ஆசீர்வதிக்கட்டும்.
சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே வோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
ராஜப்பா
மார்கழி 30 (ஜன 14, 2011)
11:20 காலை

Comments