Skip to main content

Posts

Vishakha Hari ஸ்ரீமதி விஷாகா ஹரி

ஸ்ரீமதி விஷாகா ஹரி (விஸாகா ஹரி??) சென்ற வாரம் 26-06-2010 மற்றும் 27-06-2010 தேதிகளில் பெஸண்ட்நகர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோயிலில் உபன்யாஸம் செய்தார். 26-06-2010 சனிக்கிழமை மாலை 6-45க்கு ” ஸ்ரீ சுப்ரமண்ய வைபவம் ” என்ற தலைப்பில் உபன்யாஸம் செய்தார். முருகன் மீது பல பாடல்களைப் பாடினார். அடுத்த நாள், ஞாயிறன்று, “ ஸ்ரீ ராம நாம மஹிமை ” குறித்து உபன்யாஸம் செய்தார். இந்த இரண்டு உபன்யாஸங்களுக்கும் என்னால் போக இயலவில்லை (கால் பந்து உலகக் கோப்பை !!) . விஜயா முதல் நாள் மட்டும் போனாள். இரண்டு உபன்யாஸங்களுமே நன்றாக இருந்தன என அறிந்தேன்; நிறையக் கூட்டமும். ராஜப்பா 29-06-2010 காலை 11:00 மணி

காஞ்சிபுரம் சென்றோம் ... Kanchipuram 2010

சென்ற ஞாயிறு (ஜூன் 6) நாங்கள் காஞ்சிபுரம் சென்றோம். நான், விஜயா, சுகவனம் ஆகிய மூவர் மட்டும் அர்விந்த் காரில் ஓட்டுனர் வைத்துக் கொண்டு சென்றோம். காலை 7-15 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, போரூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்றோம். எங்கள்  பெரியப்பாவின் கொள்ளுப் பேத்திக்கு காஞ்சியில் 7-ஆம் தேதி கல்யாணம். முதலில், சரோஜாவும், அத்திம்பேரும் வருவதாக இருந்தனர். சரோஜாவிற்கு காலில் அடி பட்டதால், அவர்கள் வரவில்லை. பெரியப்பா சாம்பமூர்த்தியின் 4 பிள்ளைகளில் மூத்தவர் வீரராகவன; இவரது மூத்த மகன் சுப்ரமணியத்தின் (மணி) மகளுக்கு கல்யாணம். கல்யாணம் தவிர நிறைய கோயில்கள் பார்த்து தரிஸிப்பதுதான் எங்கள் காஞ்சி பயணத்தின் முக்கிய நோக்கம். 6ஆம் தேதி காலை காஞ்சியில் இட்லி-பொங்கல்-வடை சாப்பிட்டு விட்டு, நேராக ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். பல்லவர்களால் 1053ல் கட்டப்பெற்ற புராதனக் கோயில் இது. பெருந்தேவி தாயாருடன் ஸ்ரீவரதராஜப் பெருமான் இருக்கிறார். மிகப் பெரிய கோயில். பல இடங்களில் நிறையப் படிகள் ஏறி, இறங்கவேண்டும். இங்குதான் தங்கப் பல்லி,  வெள்ளிப் பல்லி உள்ளன. ஸ...

கல்யாண சமையல் சாதம் ...

நேற்று மாலை ஒரு கல்யாண வரவேற்பிற்கு சென்றிருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்னால் இன்னொரு வரவேற்பிற்கு. இரண்டு விழாக்களிலும் பல ஒற்றுமைகள் கண்டேன். கல்யாணத்திற்கு முதல் நாள் மாலையே வரவேற்பு. கூட்டமான கூட்டம். உணவருந்தும் கூடம் மிகச்சிறியது. முதல் பந்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்கள் நாற்காலிகளுக்குப் பின்னால் நின்று கொண்டு காத்திருந்த அடுத்த பந்தி! சாப்பிட்ட இலைகளை எடுப்பதற்கு முன்பே அடித்துப் பிடித்துக் கொண்டு உட்காரவேண்டிய கட்டாயம். காலத்தின் கோலம். ஒருவழியாக பந்தியில் அமர்ந்து விட்டீர்களா? கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள். இதோ - பரிமாற வந்துவிட்டார்கள். வரவேற்பு உணவு வகைகளும் வித்தியாசம் ஏதும் இல்லாமல் ஒரே மாதிரியாக ஆகிவிட்டன; பாதி அல்லது கால் (1/4) ருமாலி ரோட்டி (நாங்களெல்லாம் பஞ்சாபி உணவுதான் சாப்பிடுவோம், தெரியுமா?), ஒரு டேபிள்ஸ்பூன் குருமா, ஒரு டீஸ்பூன் பச்சடி (மன்னிக்கவும், ராய்த்தா). ஒரு சிறிய ரசக் கரண்டி புலவ், இன்னொரு ரசக் கரண்டி சாம்பார் சாதம். கோஃப்தா ஒன்று, ஒரு ரசக் கரண்டி தயிர் சாதம். சாப்பிட்டாச்சா? எழுந்திருங்கள், அடுத்த இலையை எடுத்தாகி விட்டது...

மெரீனா பீச்

மெரீனா பீச் போக மே மாதம் 8ஆம் தேதியன்று நான் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பிசுபிசுத்துப் போனது. இங்கு படிக்கவும்  அடுத்த முயற்சியாக நேற்று (25 மே) மாலை மீண்டும் பஸ் நிறுத்தத்தில் 1/2 மணி நேரம் நின்றோம். நொந்து போய், வீடு திரும்ப பத்து அடிகள் எடுத்து வைத்தபோது 21-D வந்தது, அதுவும் காலியாக. அரைமணி நேரத்தில் நாங்கள் ராணி மேரிக் கல்லூரி வாசலில் இருந்தோம். காமராஜர் சாலையை (Beach Road) குறுக்காக கடந்து பீச் பக்கம் போய் நடக்க ஆரம்பித்தோம். மிகவும் அழகிய, சுத்தமான நடைபாதை பளபளத்தது. இரண்டு கிமீ நடந்த பின்னர் கொஞ்சம் உட்கார்ந்தோம். கண்ணகி சிலை நிறுத்தத்தில் பஸ் பிடித்து வீடு திரும்பினோம். மெரீனா பீச் நிஜமாலுமே மிக அழகாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. துணை முதல்வர் திரு ஸ்டாலினுக்கு நன்றிகள். LightHouse-லிருந்து சிவானந்தா சாலை வரை (அல்லது அதையும் தாண்டி) பளபளக்கும் நடைபாதை உள்ளது. உட்கார, குழந்தைகள் ஓடியாடி விளையாட நிறைய இடங்கள் இருக்கின்றன. நீணட நெடிய புல்தரைகள் பச்சைக் கம்பளமாக விரிந்திருக்கின்றன. நீங்களும் போய்ப் பாருங்கள்.   ராஜப்பா 10 மணி 26-05-2010

இயற்கையின் இன்னொரு பக்கம்.

இயற்கையின் கொள்ளை அழகை (விரிந்து பரந்த வங்கக்கடலை வர்ணித்து) போனமுறை எழுதியிருந்தேன் . இன்று (19-5-2010) இயற்கையின் இன்னொரு அழகிய பக்கத்தைப் பற்றி ...   நேற்று முதல் கடலில் காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதாகவும், அதனால் சென்னையில் பலத்த மழையும், காற்றும் இருக்குமென சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இரவு முழுதும் பெரிய தூற்றல்களாக மழை பெய்து கொண்டேயிருந்தது. காலையில் “ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து” ஊரே இருட்டாக இருந்தது. மழையும் இருந்தது. காலை 6 1/2 மணிக்கு விஜயாவும் நானும் மழையிலேயே குடை பிடித்துக் கொண்டு கிளம்பினோம். பீச் பக்கம் சென்றால், அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டு உயரம் உயரமாக எழும்பிக் கொண்டிருந்தன. தண்ணீர் அருகில் சென்றோம். நாங்கள் இருவர் மட்டுமே அங்கு இருந்தோம். ஆர்ப்பரிக்கும் அலைகளைப் பார்க்க பார்க்க, மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆள் உயரத்திற்கு அல்லது இரண்டு ஆள் உயரத்திற்கு அலைகள் எழும்பின. இதுவரை சாதுவாக, அலையின் ஓசையே அதிகம் கேட்காமல், மென்மையாகத் “தளும்பிக்” கொண்டிருந்த கடலா இது? என்ன ஒரு மாற்றம்! இயறகையின் இன்னொரு பக்கமும் அழகுதான். பத்து நிமிஷங...

ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி கோயில், அடையாறு.

நேற்று (ஞாயிறு, 9th மே) மாலை 5 மணி சுமாருக்கு விஜயாவும் நானும் “சிறிதாக கொஞ்சம்" walking போகலாம் என எண்ணி, 3rd அவென்யூவில்  போனோம். கொஞ்ச தூரம் என்பது 3rd அவென்யூவைத் தாண்டி, பெசண்ட் அவென்யூவில் தொடர்ந்தது. பெசண்ட் அவென்யூ முழுதும் நடந்த பிறகு, அங்கிருந்து அருகிலுள்ள ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமி கோயிலிற்கு போக ஆசைப்பட்டோம். டிராஃபிக்கினுள் நுழைந்து, புகுந்து கோயிலுக்குப் போனோம். கடைசியாக இந்தக் கோயிலுக்குச் சென்று சுமார் 2 ஆண்டுகள் ஆகியிருக்கும். திருவனந்தபுரத்தில் இருப்பது போலவே இங்கும் கோயில் அமைந்துள்ளது. பெருமாள் சயன கோலத்தில் காக்ஷி கொடுக்கிறார். மூன்று வாசல்கள் வழியாகத்தான் பெருமாளைத் தரிஸிக்க முடியும். கோயிலில் நுழைந்த சமயம் பெருமாளுக்கு தீபாராதனை ஆரம்பித்தனர். மனம் குளிர, மிக மகிழ்ச்சியோடு ஸ்வாமியை தரிஸித்தோம். தீபாராதனைக்குப் பிறகு, ப்ராகாரம் சுற்றி விட்டு, வீடு திரும்பினோம். கோயிலில், பூமாதேவி, ப்ரஹ்மா, தக்ஷிணாமூர்த்தி, திவாகர கருடன், இஷ்ட ஸித்தி விநாயகர், மஹாவிஷ்ணு, நவக்கிரகம், வீர ஆஞ்சனேயர் முதலானோர்க்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. அனந்த பத்மநாப ஸ்வாம...

மெரீனா பீச்சில் நாங்கள் !!

இன்று (8-5-2010) மாலை மெரீனா கடற்கரை செல்லலாம் என எண்ணி, 5 மணி சுமாருக்கு பஸ் நிறுத்தத்தில் போய் நின்றோம். வரும் பஸ்களில் எல்லாம் மந்தை மந்தையாக மனித கூட்டம் இறங்கி உள்ளூர் கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். எல்லாமே வேறு பஸ்கள்; மெரீனா செல்லாத பஸ்கள். 1/4 மணி, 1/2 மணி, 40 நிமிஷங்கள் மெரீனா செல்லும் பஸ்ஸிற்காக காத்திருந்து, ஏமாந்து பின்னர் நாங்களும் உள்ளூர் பீச்சிற்கே சென்றோம்!! KALEIDOSCOPE என்று சொல்வார்களே, கடற்கரையில் KALEIDOSCOPE OF HUMANITY இருந்தது. ஒரு மணி நேரம் இருந்துவிட்டு வீடு திரும்பினோம். மெரீனா பீச் செல்லும் எங்கள் முதல் முயற்சி இவ்வாறாக பிசுபிசுத்து போயிற்று !! ராஜப்பா இரவு 8 மணி 8-5-2010