"ஸீதா கல்யாண வைபோகமே, ராமா கல்யாண வைபோகமே " - இந்த பாடலுடன் விஷாகா ஹரியின் (Smt Vishakha Hari) "சீதா கல்யாணம்" உபன்யாசம் நிறைவடைகிறது. இரண்டு VCDக்கள்.சுமார் 3 1/2 மணி நேரம் போனதே தெரியவில்லை. ஒரு தெய்வீக அனுபவம். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்திற்கே அழைத்துச் செல்லப்பட்டோம். We both were transported to another world, a pristine and sublime world. வால்மீகியும், துளசிதாஸரும், கம்பரும், அருணாச்சல கவிராயரும் ("யாரோ, இவர் யாரோ") மிக முக்கியமாக தியாகராஜரும் விஷாகாவின் இந்த உபன்யாசத்தில் தவழ்ந்து வருகிறார்கள். தியாகராஜரின் கீர்த்தனைகள் தேனாக ஒலிக்கின்றன. என்னை விட விஜயா மிகவும் அனுபவித்தாள். பல கீர்த்தனைகளை கூடவே சேர்ந்து பாடிக்கொண்டிருந்தாள். அயோத்யாவிற்கு மகரிஷி விஸ்வாமித்திரர் வருவதில் ஆரம்பித்து, அவர் ஸ்ரீராமரை அசுர வதத்திற்கு (யக்ஞத்தை காப்பதற்கு) அழைத்துச் செல்வது, பின்னர் மிதிலாபுரிக்கு செல்வது, இடையில் அகல்யைக்கு சாப விமோசனம் தருவது, மிதிலையில் சிவ தனுஷை முறிப்பது, ஸீதா கல்யாணம் --- என உபன்யாசம் செல்கிறது. கேட்ட கதைதான், ஆனாலும் அந்த அனுபவம் சொல்லி விளக