வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் முந்தாநாளும், நேற்றும் (31-03-2012 மற்றும் 01-04-2012) அடையாறு ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் மாலை 6-30க்கு “திருவனந்தபுரம் க்ஷேத்ர மஹாத்மியம்” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் உபந்யாஸம் செய்தார்.
31-ஆம் தேதியன்று விஜயாவும் நானும் சென்றோம். 5 மணிக்கே சென்று முதல் வரிசையில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டோம். 6-30க்கு ‘எள் போட்டால் எள் விழாத’ அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.
நிறைய விஷயங்கள் சொன்னார். பெருமாளை தரிஸிக்க ஏன் மூன்று த்வாரங்கள் என்பதை விளக்கினார். முதலில் திருவடிகள், அடுத்து நாபிக்கமலம், இறுதியில் திருமுடி (திருமுகம்) என தரிஸிக்கும் முறையை சொன்னார்.
அனந்த காடு குறித்த வரலாறையும், தேங்காய் சிரட்டையில் அரிசி நொய்க் கஞ்சி, உப்பு மாங்காய் ஏன் நைவேத்யமாக ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கப் படுகிறது என்பதற்கான வரலாற்றை கூறினார். இன்னும் பல பல விஷயங்களை சொன்னார். 2 மணி நேரம் போனதே தெரியவில்லை.
ஏப்ரல் 1-ஆம் தேதி நாங்கள் போகவில்லை. கோயில் இருக்கும் ரோடையே அடைத்து விட்டு அங்கும் நாற்காலிகள் போட்டு பக்தர்களை உட்கார்த்தி வைத்தனர் எனவும், இதுவும் போதாமல் கூட்டம் அலைமோதியது எனவும் பின்னால் அறிந்தோம்.
ராஜப்பா
1-4-2012
1000 மணி
Comments