Skip to main content

Posts

Showing posts from 2011

Vegetables Analysis

நாங்கள் வாங்கும் காய்கறிகளை வரிசைப்படுத்தி நான் ஜூலை 2011-ல் ஒரு அட்டவணை போட்டு அலச ஆரம்பித்தேன். மொத்தம் 51 விதமான் காய்கறிகள் (கீரைகளையும் சேர்த்து) காய்களின் விவரம் -- முளைக்கீரை, மணத்தக்காளி கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, புதினா, பாலக், வெந்தயக்கீரை, கீரைத்தண்டு (8) தக்காளிப்பழம், உருளைக்கிழங்கு, காரட், வெங்காயம், சின்ன வெங்காயம், எலுமிச்சம்பழம், பூண்டு (7); கொத்தவரங்காய், புடலங்காய், முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், காலிஃப்ளவர்,சின்ன உருளைக்கிழங்கு; கோவைக்காய்;(8) கத்தரிக்காய், வெண்டைக்காய், குடைமிளகாய், அவரைக்காய், முள்ளங்கி, பாகற்காய், நூல்கோல், மிதிபாகற்காய்; (8) முருங்கைக்காய், பச்சைப் பட்டாணி, சௌசௌ, பரங்கிக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், சுண்டைக்காய் (8) வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ; (3) சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, சக்கரை வள்ளிக்கிழங்கு; (4) வெள்ளரிக்காய்,கொட்டைவகைகள், வேர்க்கடலை, சோளம், காராமணி (5) இவற்றில் எதை அதிக முறை வாங்கினோம் என அலசியதில், கீழ்க்கணட விவரங்கள் பதிந்தன:- ஜூலை 2011 _ல் அதிகம் வாங்கியவை. முள

Marghazhi 2011 மார்கழி மாசம்

நேற்று மார்கழி மாசம் பிறந்தது.    விடியற்காலம் எழுந்து , பச்சைத் தண்ணீரில் குளித்து , தோய்த்து உலர்த்திய ஆடைகளை உடுத்திக் கொண்டு திருப்பாவை , திருவெம்பாவை பாடிய பின்னர் , அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று ஸ்வாமியை தரிசிக்க ஆரம்பித்து விட்டேன் . இன்று [18-12-2011] காலை அருகிலுள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலுக்கும் , பிறகு ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்கும் சென்று வந்தேன் . ராஜப்பா 18-12-2011 7-45 காலை.

சபரி மோக்ஷம் - விஷாகா ஹரி

சென்னை, செட்டிநாடு வித்யாஷ்ரம் ஸ்கூலில், குமாரராஜா முத்தையா ஹாலில் ஒவ்வொரு வருஷமும் JAYA TV நடத்தும் “மார்கழி மஹோத்ஸவம்” டிசம்பர் 1 ஆம் தேதி துவங்கி, 15 ஆம் தேதி முடிவடையும். ஒவ்வொரு வருஷமும் கடைசி நாளான டிச 15 ஸ்ரீமதி விஷாகா ஹரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பல வருஷங்களாக விஷாகாவின் கதா காலக்ஷேபத்துடன் இந்த விழா முற்றுப் பெறுகிறது. போன வருஷம் (டிச 2010)  “ஸ்ரீகிருஷ்ண லீலா” நடந்தது.  (படிக்க) ஸௌம்யா, அதிதி போன்ற குழந்தைகளுக்கு ராமாயணம் கதை சொல்லும்போது, “ஸ்ரீராமருக்கு பழம் கொடுத்தாள்,” என சபரியைப் பற்றி கூறுவேன்; அத்தோடு சபரியின் பங்கு முடிந்தது. நேற்று (15-12-2011) செட்டிநாடு வித்யாஷ்ரம் குமாரராஜா முத்தையா அரங்கில் உபன்யாஸம் செய்த ஸ்ரீமதி விஷாகா ஹரி அப்படி நினைக்கவில்லை; இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல், அவர் தனது இனிமையான குரலில் சபரியைப் பற்றி நாம் அறிந்திராத பல விஷயங்களை பாடல்கள், கதைகள் மூலம் சொன்னார். விஷாகாவின் நேற்றைய “ சபரி மோக்ஷம்” மிக அற்புதமாக, தெய்வீகமாக இருந்தது. சபரர் என்னும் ஆதிவாசி இனத்தில் மலைவாழ் பெண்ணாகப் பிறந்த சபரி, தன் தாயால் புறக்கணிக்கப்பட்டு, அநாதையாக, மனித

Back to School - After 46 years - The DAY

It was in the air for many weeks; I wrote about it in October 2011. The momentum gathered fast when the HINDU met 5 at Vadapalani and published the meet with a large photo. [ read ] The day was Sunday, the 4th Dec 2011. Vijaya got up by 4-30 AM and left house by 5-45. Arun dropped her at TNagar bus terminus. Boarded the bus at 0610 for Kanchipuram and she reached there by 8-15. Arrived in Sri Kamakshi Amman Koil and waited. Ladies of the 1965-class of Somasundara Kanya Vidyalaya (SSKV) Kanchipuram started arriving, and the next 30 minutes saw over 40 assembling. A few had seen the HINDU article and joined the group. After darshan of the Amman, and an archanai later, they ambled to their old alma mater nearby. It was an emotional meet, seeing one another after 46 years, not able to recognise anyone at the first sight. Time had transformed everyone, from bubbly, bouncing and beautiful young lasses of 16 and 17 years, to matured, grown-up and withered grandmothers of 62 and

மயிலாப்பூரில் இன்று ...

இன்று (06 டிசம்பர் 2011) மாலை நானும் விஜயாவும் மயிலாப்பூர் சென்றோம். பஸ் கட்டண உயர்விற்குப் பின்னர் நாங்கள் மயிலாப்பூருக்குச் செல்வது இதுவே முதல் முறை. பஸ் டிக்கெட் ரூ 13.00 ஆக உயர்ந்துள்ளது. இருவர் போய்விட்டு வர ரூ 52.00 ஆகிவிடுகிறது. மயிலாப்பூரில் முதலில் வடக்குமாட வீதி வழியாக கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போனோம். கோயிலுக்குச் சென்று ஒரு மாசத்திற்கும் மேலாகிவிட்டது. கோயிலில் நல்ல கூட்டம். இருப்பினும், ஸ்ரீ கற்பகாம்பாளையும், ஸ்ரீ கபாலீஸ்வரரையும் நன்றாக, கண்குளிர திருப்தியாக தரிஸனம் செய்தோம். இந்தக் கோயிலில் கிடைக்கும் மனநிம்மதி வேறு எங்கும் கிடைப்பதில்லை. மயிலாப்பூருக்கு இணை கிடையாது. பின்னர் கிரி டிரேடர்ஸுக்கும், மாமி மெஸ்ஸுக்கும் சென்றோம். தெற்கு மாடவீதியில் நுழைந்து சில சாமான்களை வாங்கினோம். பஸ் பிடிக்க போய்க் கொண்டிருக்கும் போது, விஜயாவிற்கு திடீரென தனது 1965-வகுப்பு தோழி (வயது 66) நாகலக்ஷ்மியின் நினைவு வந்தது. சென்ற ஞாயிற்றுக்கிழமை இந்த 1965-வகுப்பு “ஸோமஸுந்த்ர கன்யா வித்யாலயா” மாணவிகள் பலர் 40க்கும் மேல் காஞ்சிபுரத்தில் தங்கள் பழைய பள்ளிக்க

Back to School - After 46 years.

Forty students of SSKV School in Kancheepuram will meet after 46 years on December 4 at their alma mater It's a meeting with a few women from a 40-member group that has planned a reunion after 46 years at their alma mater, Somasundara Kanya Vidyalaya (SSKV) in Kancheepuram, and I arrive 15 minutes late. It's obvious I was not missed. Five grey-haired women, draped in saris, sit misty-eyed recollecting memories. Shanthi shakes her head in disbelief, as she tells V.S. Manonmani, “It's incredible I failed to recognise you — one of my best buddies!” Like a stump sprouting to life at the touch of water, faded memories return powerfully as they discuss their teachers, rivalries and pastimes at SSKV. Y. Vijaya reminds Ambika about their close competition in academics. “Often, just half a mark would separate us,” recalls Vijaya. Ambika nods in agreement. When Shanthi remembers their principal Yashoda Bai, her friends mention the admirable qualities the lady had. “Our SSLC e

ஸ்ரீமத் பாகவதம் 10 வது ஸ்கந்தம் - பகுதி 3 - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

10வது ஸ்கந்தம் - பகுதி 3 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பாகவதத்தின் 10-வது ஸ்கந்தத்தை 25-03-2011 அன்று ஆரம்பித்தார். இந்த ஸ்கந்தத்தில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளன. இந்த ஸ்கந்தம் மிக நீளமானதால் (மொத்தம் 90 அத்தியாயங்கள் உள்ளன) இதை நான் மூன்று பகுதியாக பிரித்து எழுதுகிறேன். இது 3-வது பகுதி. ஜராசந்தன் வதம் : ஸ்ரீகிருஷ்ணன் இந்திரப்ப்ரஸ்தம் சென்று பாண்டவர்களுடன் இருந்தார். ஜராசந்தனை அழிக்க பீமனை கருவியாக்கிக் கொண்டு, பீமன் மூலம் ஜராசந்தனை அழித்தார். (10:72) பாண்டவர்கள் (தர்மபுத்திரர்) செய்த ராஜஸுய யாகத்தில் முதல் நமஸ்காரம் ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தான் செய்ய வேண்டும் என பாண்டவர்கள் விரும்பினார்கள்; ஆனால், சிசுபாலன் இதை எதிர்த்தான்.(10:73) ராஜஸுய யாகம் இங்கு நன்கு விளக்கி சொல்லப்படுகிறது. பாண்டவர்களின் அரண்மனையில் புகுந்த துரியோதனன் தண்ணீர் இல்லாத இடத்தில் தண்ணீர் இருப்பதாக நினைத்து நடந்ததையும், தண்ணீர் இருந்த இடத்தில் இல்லையென்று எண்ணி, வழுக்கி விழுந்ததையும் பார்த்து பீமன், திரௌபதி முதலானோர் அவனை பார்த்து சிரித்தனர். (10:75) சால்வா என்ற அ

ஸ்ரீமத் பாகவதம் 10 வது ஸ்கந்தம் - பகுதி 2 - ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

10 வது ஸ்கந்தம் பகுதி 2 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பாகவதத்தின் 10-வது ஸ்கந்தத்தை 25-03-2011 அன்று ஆரம்பித்தார். இந்த ஸ்கந்தத்தில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும், முடிவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளன. மறுநாள் காலை கம்ஸனுடைய அரண்மனை சென்றபோது அங்கிருந்த குவலயாபீடம் என்னும் பெருத்த யானையை வீசி எறிந்து முடித்தான். பின்னர் 5 மாமல்லர்களையும் அழித்து முடித்தான். (10:43) கம்ஸவதம் : முதலில் சனூரா என்ற அசுரனுக்கும் கண்ணனுக்கும் மாபெரும் மல்யுத்தம் நடந்தது. பலராமன் முஷ்டிகா என்ற அசுரனுடன் போரிட்டார். ஸ்ரீகிருஷ்ணன் சனூராவை அழித்து முடித்தார். சனூரா,முஷ்டிகா, குதா,சாலா, டோசாலா என்னும் பல அசுரர்கள் மாண்டார்கள். கடைசியில், கம்ஸனும் மாண்டான். (10:44) ஸ்ரீகிருஷ்ணன் தன் தாய் தகப்பனாரை சிறையில் இருந்து விடுவித்து, உக்ரஸேனரை மீண்டும் மஹாராஜாவாக்கினார் (10:45) கண்ணன் திரும்ப வராததால் மிகுந்த சோகத்தில் இருந்த நந்தனையும், யசோதாவையும் ஆறுதல் கூறி தேற்றுமாறு உத்தவரை வ்ரஜா பூமிக்கு அனுப்பினார். அவரும் அவ்வாறே செய்தார் (10:46). உத்தவர் மதுரா திரும்பினார். (10:47) அக்ரூரர் ஹஸ்தினாபுரம் சென்று

We went to Vaithiswaran Koil 27th Oct 2011

We went to Vaithisvaran Koil on 27th Oct 2011. This is our FIFTH visit since 2007. I, Vijaya, Arun, Ashok, Neeraja, Arvind, Sowmya, Aditi, and Sriram left house at 7 AM in a call taxi for Egmore. Gayathri and Krithika couldn't come.The train (Cholan Express) left at 0820 AM. Ashok had booked our tickets in 3 AC both ways and the travel was a pleasure.  Earlier, Vijaya, Krithika, Neeraja had prepared Idli, Lemon rice, and Thayir Saatham for our trip. We ate these on the way, and reached V-Koil by 2 PM. I had booked three rooms at Balambikai Lodge (500.00 per.) After refreshing ourselves, we went to the temple and performed archanai to all the five Deities - Vinayakar, Swami, Ambal, Muthukumara swami, Angarakan. Returning to the lodge, we slept after a nice dinner. Next morning, on 28th, after bath etc, we again went to the Koil and worshipped Lord Vaithyanatha Swami. Lunch at 1000, and then we left for station. The train arrived by 11-30 AM and we reached Egmore by 6 PM. Aru

46 வருஷங்களுக்குப் பிறகு ....

ஸ்ரீமதி பிரேமா லக்ஷ்மிநாராயணன், வேலூர் ஸ்ரீமதி மஹாலக்ஷ்மி, பெங்களூர் ஸ்ரீமதி கோகிலா, நங்கநல்லூர், சென்னை ஸ்ரீமதி சந்திரிகா, காஞ்சிபுரம் ஸ்ரீமதி மனோன்மணி,போரூர், சென்னை ஸ்ரீமதி அம்பிகா, வடபழனி, சென்னை ஸ்ரீமதி (டாக்டர்) மல்லிகேஸ்வரி, காஞ்சிபுரம். இவர்கள் ஏழு பேருக்குள்ளும் ஒரு ஒற்றுமை உண்டு; முதலில் இந்த ஏழு பேரும் யார்? இவர்கள் யாவருமே அறுபது வயதை தாண்டியவர்கள்; பேரன், பேத்திகளோடு இருப்பவர்கள். ஒற்றுமை இது மட்டுமல்ல. யாவருமே காஞ்சிபுரம் ஸோமசுந்தர கன்யா வித்யாலயா வில் 11-வது (எஸ் எஸ் எல் ஸி)  வரை ஒன்றாகப் படித்தவர்கள். ஒற்றுமை இது மட்டுமல்ல. யாவருமே விஜயா வுடன் ஒன்றாகப் படித்த மாணவிகள் / தோழிகள். இதுதான் முக்கியமான ஒற்றுமை. 11-வது முடித்ததும் (1965) யாவரும் பிரிந்து விட்டனர். தொடர்பே இற்று விட்டது. நாங்கள் 2001-ல் சென்னை வந்ததும், விஜயா ஒருமுறை காஞ்சிபுரம் சென்றாள். அங்கு, பிரேமா என்னும் தோழி நினைவுக்கு வர அவர்கள் வீட்டிற்கு சென்றாள்.  பிரேமாவின் அம்மாதான் இருப்பார், அவரிடம் பிரேமாவின் அட்ரஸை கேட்கலாம் என சென்ற விஜயா அங்கு பிரேமாவையே அதிர்ஷ்டவசமாக பார்த்தாள். நட்பு மீ

Lalitha Sashti abtha poorthy

விஜயாவின் தங்கை லலிதாவிற்கு இந்த வருஷம் 2011 ஆகஸ்டு 20 -ஆம் தேதியன்று 60 வயது பூர்த்தியானது. நக்ஷத்திரம் 21-ஆம் தேதியன்று வருகிறதா, இல்லை 20-ஆம் தேதியே வந்து விடுகிறதா என ஒரு சிறு குழப்பம். என்னைப் பொறுத்தவரையில் 21-ஆம் தேதி என்பதில் எனக்கு குழப்பமில்லை; ஆனால் அவர்கள் 20-ஆம் தேதியே ஹோமம் பண்ண இருப்பதாக சொன்னவுடன், நான் என் வாயை இறுக்க மூடிக்கொண்டு விட்டேன். 20-08-2011 சனிக்கிழமை காலை 7-10க்கு நான், விஜயா, அதிதி, இந்திரா, அர்விந்த் ஆகியோர் ஆவடி கிளம்பினோம். கிருத்திகாவால் வர இயலவில்லை. 8-15க்கு ஆவடி போய் சேர்ந்தோம். காலை சிற்றுண்டி இட்லி சாப்பிட்டோம். சாஸ்திரிகள் 8-45 சுமாருக்கு வந்து பூஜையை ஆரம்பித்தார்; கணபதி ஹோமமும், புண்யாகவசனமும் பண்ணினார். அருண், காயத்ரி, குழந்தைகள் 10 மணிக்கு வந்தனர். ஹோமம் முடியும்போது 10-15 இருக்கும். பின்னர் சாப்பாடு (காடரிங்). குமார்-லலிதா, ஜனனி, ராம், ப்ரத்யுன், பிரபாகர், மாமி, நாங்கள் 5 பேர், இந்திரா, அகிலா, ஜ்யோத்ஸ்னா, கோபு, சரோஜா, விஜய், குழந்தைகள், குமாரின் அக்கா, அக்கா பையன்கள், குடியிருந்த மாமா-மாமி என சுமார் 28 பேர் சாப்பிட்டோம். பின்னர் 1-30 மண

Sri Varalakshmi Vratham by Gayathri

ஸ்ரீ வரலக்ஷ்மி வ்ரதம். காயத்ரி போன வாரம் - 12-08-2011 வெள்ளிக்கிழமை - வரலக்ஷ்மி விரத பூஜை பண்ணவில்லை. அதனால், அவள் இந்த வெள்ளிக்கிழமை 19-08-2011 அன்று பூஜை பண்ணினாள். விஜயாவும் நானும் வியாழன் மாலை 4 மணிக்குக் கிளம்பி, 5 மணி சுமாருக்கு படூர் போய்ச் சேர்ந்தோம். விஜயா காயத்ரிக்கு சிலபல உதவிகள் செய்தாள். அருண் கடைத்தெருவிற்கு சென்று பூஜை சாமான்கள் வாங்கி வந்தான். அன்றிரவு நாங்கள் அங்கேயே தங்கினோம். மறுநாள் வெள்ளியன்று காலை குளித்து பூஜைக்கு தயாரானோம். நைவேத்தியங்களை செய்து, காயத்ரியும் தயாரானாள். காலை 10 மணிக்கு நான் மந்திரங்கள் சொல்ல, காயத்ரி பூஜை ஆரம்பித்தாள்.11மணி சுமாருக்கு பூஜை நிறைவுற்றது. தேங்காய் கொழுக்கட்டை, உப்பு கொழுக்கட்டை, வடை, பாயஸம் செய்து நிவேதனம் பண்ணினாள். சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் தூங்கி எழுந்தோம். மாலை 4 மணிக்கு கிளம்பி திருவான்மியூருக்கு 5 மணி அளவில் வந்து சேர்ந்தோம். போகும்போது “சொகுசு” பஸ்ஸிலும் (13.00) திரும்பும்போது ஏஸி பஸ்ஸிலும் (33.00) வந்தோம்.  இவ்வாறாக, இந்த வருஷம் வரலக்ஷ்மி பூஜை பண்டிகை நன்கு நடந்தது. ராஜப்பா 20-08-2011 3 PM

Rare words

வழக்கம் ஒழிந்த சில வார்த்தைகள் (வெந்நீர்) வெளாவுதல், (தண்ணீர்) சேந்துதல்,(தலை) துவட்டுதல் சட்டுவம், வாணலி, தாம்பாளம், சிப்பல் தட்டு, வெங்கலப் பானை, ஆப்பக்கூடு, கிண்டி, பாலாடை, கல்சட்டி, ஜோடுதவலை, கங்காளம், அருக்கஞ்சட்டி, குண்டான், ஏனம், கூஜா முறம், ஜல்லடை, உரல், உலக்கை, ஏந்திரம், ஆட்டுக்கல், அம்மி, கல்லுரல் (வெந்நீர்) அண்டா, சிம்னி, லாந்தர், அரிக்கேன் விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கு, பம்ப் ஸ்டவ், சீமை எண்ணெய், கழநீர் (அரிசி) புடைக்கிறது, நோம்பறது, களையறது, (வாழைப்பூ) கள்ளன், மடல் மடிக்கோல், வாங்கி, துரட்டுக்கோல், கொறடு, நடைவண்டி, பாக்குவெட்டி உழக்கு, ஆழாக்கு, மரக்கால், படி, வீசை, பலம், மாகாணி, தம்படி, கழக்கோடி,பலக்கல், நாழி குருணை, மணை, கோலக்குழாய் குமுட்டி, விறகு, கோட்டை அடுப்பு, ஊதுகுழல், கொட்டாங்கச்சி, தடுக்கு பலப்பம், சிலேட், சுருணை, தப்படி, எருமுட்டை, குதிர் ஓடு,, கீத்து, வாரை, உத்தரம், மாடம், திண்ணை, ரேழி,கூடம், மச்சு, தாவாரம், சமையல் உள், அடுக்களை, முத்தம் (முற்றம்), வெந்நீர் உள் பரண், அட்டம், பிறை, எரவாணம், நிலப்படி, தொட்டி முத்தம், வெந்நீர் உள், விசுப்பலகை கொ

Sri Varalakshmi Vratham - 2011

12-08-2011, வெள்ளிக்கிழமை: எல்லாருடைய வீடுகளைப் போலவே எங்கள் வீட்டிலும் இன்று ஸ்ரீவரலக்ஷ்மி வ்ரதம் நன்கு நடைபெற்றது. முதல் நாளே பூஜைக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து நிறைய முடிந்து விட்டன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கிருத்திகாவால் பூஜையில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே 12-ஆம் தேதியன்று விஜயா மட்டுமே பூஜை செய்தாள். சொந்த வீட்டில் நடக்கும் முதல் வரலக்ஷ்மி பூஜை இது. காலையில் சீக்கிரமே எழுந்து பூஜைக்கான, நைவேத்தியத்திற்கான வேலைகளை விஜயா செய்ய ஆரம்பித்தாள். உதவிக்கு கிருத்திகாவின் அம்மா வந்தார். நான் பூஜையை 10-15க்கு ஆரம்பித்தேன். மந்திரங்களை நான் சொல்ல, விஜயா பூஜை செய்தாள். கூடவே அதிதியும் செய்தாள். சிறப்பாக நடந்தது. 11-30 சுமாருக்கு முடிந்தது. விஜயா பாயஸம், வடை, இட்லி, இரண்டு வித கொழுக்கட்டைகள் (எள், தேங்காய்), மற்றும் ஒரு கறி, ஒரு கூட்டுடன் சாப்பாடு பண்ணினாள். கிருத்திகாவின் பெற்றோர் இங்கு சாப்பிட்டனர். ஸௌம்யா, ஸ்ரீராம் இருவரும் அருணுடன் வந்தனர். அவர்களும் இங்கு சாப்பிட்டனர். இவ்வாறாக, இந்த வருஷ பூஜை வெகு விமரிசையாக நடந்தது. எல்லாருக்கும் எங்கள் நமஸ்காரங்கள்.

Sri Vittal Rukmini Samasthan - கோவிந்தபுரம் - Pt 3

கோவிந்தபுரம் 03வது பகுதி. ஜூலை 27, புதன்கிழமை : காலை 5 மணிக்கு எழுந்து, குளித்து ஸ்ரீவிட்டல்-ருக்மிணி தாயாரின் சுப்ரபாத சேவையின் முன்பகுதியை இன்று தரிஸித்தோம். மஹாராஷ்டிர பாணியில் ஆடை உடுத்திக் கொண்டு ஸ்ரீ அண்ணா பூஜை செய்தார். அவர் அலங்காரம் பண்ணுவதை நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். பின்னர் அவர் உஞ்சவிருத்தி செய்தார். விஜயா, சாவித்திரி, மாமி மற்றும் அங்கிருந்த பெண்மணிகள் அவருக்கு அரிசி பிக்ஷை போட்டனர். கடைசியாக பாத சேவை நமஸ்காரம் பண்ணிக்கொண்டு, காரில் ஏறினோம். அப்போது மணி காலை 8-30. இந்தக் கோயிலில் ப்ரஸாதம் என ஒன்றுமே தருவதில்லை. கோயில் மிக அழகாக, புனிதமாக இருக்கிறது. பார்க்க வேண்டிய கோயில். மயிலாடுதுறையில் சிற்றுண்டி முடித்து, கடலூர் வரும்போது மணி 11-45. அங்கு பஸ் ஸ்டாண்டில் திருவண்ணாமலை செல்லும் பஸ்ஸில் சாவித்திரியை ஏற்றிவிட்டேன். சாவித்திரி அங்கிருந்து ஹோசூர் செல்வாள். (ஹோசூருக்கு அவள் மாலை 7-15க்குப் போய்ச் சேர்ந்தாள்.) புதுச்சேரி ஸர்குரு ஹோட்டலில் அருமையான மதிய சாப்பாடு. சென்னை வீட்டிற்கு மாலை 4-30 க்கு வந்து சேர்ந்தோம். இவ்வாறாக எங்கள் கோவிந்தபுரம் பயணம் மிக திர

Sri Vittal Rukmini Samasthan - கோவிந்தபுரம் - Pt 2

கோவிந்தபுரம் பகுதி 02 ஜூலை 26, செவ்வாய்க்கிழமை : விடியற்காலம் 4-45க்கு நான் எழுந்து, குளித்து, அருணாச்சலத்துடன் டாக்ஸியில் கும்பகோணம் ஸ்டேஷனுக்குக் கிளம்பினோம். கோவிந்தபுரத்திலிருந்து 12 கிமீ தூரத்தில் உள்ளது. சாவித்திரி 6 மணிக்கு வந்தாள். அறைக்கு வந்தபோது எல்லாரும் குளித்து ரெடியாக இருந்தனர். உடனடியாக் சாவித்திரியும் குளித்து, எல்லாரும் 6-45க்கு கோயிலுக்குப் புறப்பட்டோம். கோயில் complex-லியே ரூம் இருக்கிறது. இரண்டு நிமிஷ நடைதான். சுமார் 25-30 படிகள் ஏறவேண்டும். காலை 6-45க்கு சுப்ரபாத சேவை என சொல்லியிருந்தனர். ஆனால், கதவை 7-15 க்கு தான் திறந்தனர். பளிச்சென்று ஒளிவீசும் ஸ்ரீவிட்டல்-ருக்மிணியை தரிஸித்தோம். என்ன தெய்வீகமான அழகு ! ஸ்ரீ அண்ணா (விட்டல்தாஸ் மஹராஜ் இப்படித்தான் அழைக்கப் படுகிறார்) பூஜை செய்து கொண்டிருந்தார். கிருஷ்ணன் பாடல்களும், பஜனைகளும் பாடிக்கொண்டே பூஜை செய்தார். அலங்காரங்களும், பூஜையும் முடிந்த பின்னர் எங்களை ஸ்வாமி அருகில் வந்து அவரது பாதங்களில் நம் தலையை வைத்து நமஸ்காரம் பண்ண இந்தக் கோயிலில் அனுமதிக்கிறார்கள். வட இந்திய வழக்கம் இங்கும் கடைப்பிடிக்க படுகிறது.

Sri Vittal Rukmini Samasthan - கோவிந்தபுரம் - Pt I

SRI VITTAL RUKMINI SAMASTHAN - GOVINDAPURAM - Part 1 மஹாராஷ்டிர மாநிலம் பண்டர்பூர் என்னும் ஊரிலுள்ள ஸ்ரீவிட்டல் கோயிலைப் போன்று தமிழ்நாட்டிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று ஆசை கொண்டு, ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் கும்பகோணத்தின் அருகிலுள்ள கோவிந்தபுரம் என்னும் கிராமத்தில் கோயிலை நிர்மாணிக்க ஆரம்பித்தார். சேங்காலிபுரம் ப்ருஹ்மஸ்ரீ அநந்தராம தீக்ஷிதரும், அவர் தம்பி ப்ருஹ்மஸ்ரீ நாராயண தீக்ஷிதரும் தமிழ்நாட்டின் இரண்டு புகழ்பெற்ற பக்திமான்கள். நாராயண தீக்ஷிதரின் பேரனான ஸ்ரீ ஜெயகிருஷ்ண தீக்ஷிதரும் இவர்களைப் போலவே சிறந்த பக்திமான். ஸ்ரீவிட்டல் பகவான் மேல் இவருக்கு இருந்த பக்தியால் இவர் ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் என அழைக்கப்படுகிறார். இந்தியா மற்றும் உலகின் பல ஊர்களிலும் இவரது விட்டல் பஜனை புகழ் பெற்றது. கோயில் கட்டுவதற்கான நிதி உதவியை இவர் பல ஊர்களில் நாம சங்கீர்த்தனம் செய்து திரட்டினார். கோயிலும் வளர ஆரம்பித்தது. இந்த 2011 வருஷம் ஜூலை 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியில் கோயிலின் மஹாகும்பாபிஷேகம் பஜனைகள் பாடல்கள் மற்றும் வேத கோஷங்களும், விட்டல் நாமாக்களும் ஒலிக்க கோலாகலமாக நடந்தது.

Bhima Ratha Santhi

பீமரத சாந்தி (17-7-2011) ஒருவருக்கு 69 வயசு முடிந்து 70 தொடங்கும்போது பீமரத சாந்தி பண்ணுவது வழக்கம். நான் 1941-ல் பிறந்தவன்; எனவே 2011-ல் 69 முடிந்தது. என் பிள்ளைகள் மூவரும் பீமரத சாந்தி பண்ணிக் கொள்ளுமாறு வற்புறுத்தினார்கள்; புது வீட்டில் அதுவும் சொந்த வீட்டில் பண்ணிக் கொள்வது இன்னும் விசேஷமானது; எனவே மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டேன். என்னுடைய நக்ஷத்திரம் 2011, ஜூலை 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்தது. ஒருநாள் முன்பு அதாவது ஜூலை 16-ஆம் தேதி காலை 7 மணிக்கு இதைப்பற்றி என்னிடம் அர்விந்த் முதன்முதலாக சொன்னான். VERY VERY SUDDEN DECISION. எல்லா காரியங்களையும் அர்விந்த - கிருத்திகா இருவரும் ஃபோன் மூலமே முடித்தனர். அருண், அஷோக் ஆகியோருக்கு சொல்லி அவர்களும் வர சம்மதித்தனர். அஷோக் உடனே காரில் (பெங்களூரிலிருந்து) கிளம்பியே விட்டான் !! வரும் வழியில் ஹோசூரிலிருந்து சாவித்திரியையும் கூட்டி வந்தான். உறவினர் எல்லாரையும் ஃபோன் மூலமாகவே அழைத்தோம்; சாஸ்திரிகளுக்கும் அவ்வாறே! சாமான்களையும் உடனேயே வாங்கினோம். அஷோக் நீரஜா சாவித்திரி மூவரும்  பகல் 4-30க்கு வந்தனர். அர்விந்த சாஸ்திரிகள் சாமான்கள