வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸ்ரீமத் ராமாயண உபன்யாஸம் சென்ற 31 மார்ச் 2012 முதலாக சொல்லி வருகிறார். (பொதிகை டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 6-30 மணிக்கு). இதைப் பற்றி நான் எழுதியதை இங்கு படிக்கலாம் . ராமாயணம் மொத்தம் 6 காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பால காண்டம் என்பது முதல் காண்டம். இதில் 77 ஸர்கங்கள் உள்ளன. அயோத்யா மஹாராஜனான தசரதனுக்கு ராமர், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் என 4 பிள்ளைகள் பிறந்தது முதல், அந்த நால்வருக்கும் மிதிலையில் திருமணம் முடியும் வரை பால காண்டம் சொல்லுகிறது. ப்ரஹ்மரிஷி விஸ்வாமித்திரரின் யாகத்தை ராமர் காத்தது, ராக்ஷசி தாடகையை அழித்தது, பின்னர் அவரும், தம்பி லக்ஷ்மணனும் விஸ்வாமித்திரருடன் மிதிலா நகரம் நோக்கி சென்றது, நடுவில் கௌஸிக முனிவரின் பத்னியாகிய அகல்யாவிற்கு சாப விமோசனம் அளித்தது, மிதிலா ராஜ்யத்தின் அரசனான ஜனக மஹாராஜாவின் சிவதனுஸை முறித்தது, பின்பு ஜனகனின் புத்ரியாகிய ஸீதாவை ராமர் கல்யாணம் செய்து கொண்டது, பரசுராமரின் கர்வத்தை அடக்கியது போன்றவை பால காண்டத்தில் முக்கியமாக விளக்கப்படுகின்றன. ஸீதா கல்யாணத்தை பஜனை ஸம்ப்ரதாயத்தில் பஜனை