காலை 4-15க்கு எழுந்து கொள்வது, உடனே குளிப்பது, பின்னர் 4-45க்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் முதல் பகவத்கீதை ஸ்லோகங்கள் பாராயணம் செய்வது, 6-30க்கு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாஸம் கேட்பது, 6-45க்கு நியூஸ்பேப்பர் என்று கடந்த 6 வருஷங்களாக வழக்கமாக கொண்டுள்ளேன்.
சென்ற 25 நாட்களாக நான் சில புது வழக்கங்களை ஆரம்பித்துள்ளேன். வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணனின் உபன்யாஸம் 6-45க்கு முடிந்த கையோடு, நான் மேலே மொட்டை மாடிக்குப் போய்விடுகிறேன் (இரண்டு மாடி ஏறி போகிறேன்). அங்கு கிழக்கு நோக்கி அமர்ந்து, மீண்டும் வேறுபல பாராயணங்களை சொல்லுகிறேன். சூரியனைப் பார்த்து சூரிய சுடரில் உட்கார்வதால் வைட்டமின் D மற்றும் B12 கிடைக்கின்றன. இது டாக்டரின் ஆலோசனை. 30 நிமிஷம் கழித்து, மொட்டைமாடியிலேயே 30 நிமிஷம் நடக்கிறேன். மணி 7-45 ஆகிவிடும்.
அடுத்த 15-20 நிமிஷங்களுக்கு அங்குள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறேன். தண்ணீர் ஊற்றுவது பரம ஆனந்தம் தருகிறது. பின்னர் கீழே வருகிறேன்.
இவ்வாறு காலைப் பொழுது இனிமையாக போகிறது. எல்லாம் ஸ்ரீராமனின் அருள்.
ராஜப்பா
காலை 10:30 மணி
16-9-2012
Comments
By chance I visited your blog yesterday and felt very happy that I have done so. your postings are very interesting. I will continue to go through them in the coming days. thanks for your efforts.
by the by, you have written in your profile that "my interests too are varied". I feel it should be " my interests are too varied"
have a good day.
T.K. Ganesan
20-9-2012 7:10 PM