நெடுநாட்களாகவே எனக்கு ஜாதகம் கணிக்க வேண்டும், அதுவும் நானே எழுதிய மென்பொருளை(Software) உபயோகித்து கம்ப்யூட்டரில் கணிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.
வேலையிலிருந்து ஓய்வு பெற்று 2001 டிசம்பரில் சென்னை வந்ததும் இந்த ஆசை மீண்டும் துளிர்த்தது. கிரியில் நிறைய புஸ்தகங்கள் வாங்கி, படித்து என் ஜாதக அறிவை வளர்த்துக் கொண்டேன். இதில் முக்கியமாக Dr BV RAMAN எழுதிய சில புஸ்தகங்களும் அடங்கும். BV ராமனின் 2001-2050 க்கான 50-வருஷ EPHEMERIS புஸ்தகம் மிகவும் முக்கியமானது.
Ephemeris என்பது விண்வெளியில் சூரியன் முதலான எல்லா க்ரஹங்களின் தினப்படி நிலையை (டிகிரியில்) அவைகள் சுழலும் விதிப்படி கணித்து புஸ்தகத்தில் போடுவது. 2001 தொடக்கம் 2050 வரை 50 வருஷங்களுக்கும் ஒவ்வொரு நாளுக்கும் (50 X 365 நாட்கள்) இந்த டிகிரி (LONGITUDE in Degrees-Minutes) ராமனின் இந்த புஸ்தகத்தில் போடப்பட்டுள்ளது. இது இல்லாமல் ஜாதகம் கணிப்பது முடியாது. ஜூலை 2002-ல் இதை வாங்கினேன். இதுவும் கிரியில்தான் வாங்கினேன்.
பல புஸ்தகங்கள், பாம்பு பஞ்சாங்கம் இவற்றைப் படித்து கொஞ்சம் ஜாதக அறிவு வந்ததும், Microsoft EXCEL உபயோகித்து முதல் ஜாதகத்தை கணித்தேன். அதற்கு அப்புறம் எல்லாவற்றையும் தமிழுக்கு மாற்றினேன். அடுத்து, ஆண்டுக்கு ஏற்றவாறு ராமன் அயனாம்சத்தையும், லாஹிரி அயனாம்சத்தையும் கம்ப்யூட்டரில் எங்கேயோ பார்த்து இதில் வரைப்படுத்தி உபயோகித்தேன். இரண்டு, மூன்று மாதங்கள் உழைத்தேன். வெற்றி கிட்டியது.
ஸௌம்யா, அதிதி, ஸ்ரீராம், அர்ஜுன் இவர்களின் ஜாதகங்களை இப்போது துல்லியமாக கணித்துள்ளேன். அதுவும் தமிழில். எல்லாம் ஸ்ரீ BV Raman Sir க்கே அர்ப்பணம்.
ராஜப்பா
06-09-2012
காலை 10 மணி
Comments