விநாயகர் சதுர்த்தி - 2012.
இந்த ஆண்டின் (2012) விநாயகர் சதுர்த்தி 19 செப்டம்பர் புதன்கிழமை வந்தது. பாத்ரபதம் மாஸம், சுக்ல சதுர்த்தியன்று இது நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. பூக்கள், பத்ரங்கள், பழங்கள் இவற்றை கிருத்திகாவின் அப்பா கோயம்பேட்டிலிருந்து தருவித்தார். 18-ஆம் தேதியன்று நானும், விஜயாவும் மார்க்கெட் சென்று மீதி பழங்களையும், வெற்றிலை முதலானவைகளையும் வாங்கினோம்.
19-ஆம் தேதி காலையில் கிருத்திகா பூஜை அறையையும் மற்ற பூஜா சாமான்களையும் நன்கு அலம்பி சுத்தம் பண்ணினாள். 10.30க்கு அர்விந்த் பிள்ளையார் உருவம் வாங்கி வந்தான். அதிதியும் சென்றாள். TSGக்கும் சேர்த்து இரண்டு வாங்கினான். கிருத்திகா பிள்ளையாருக்கும் அலங்காரம் பண்ணினாள்.
முதல் நாளே விஜயா மாவு அரைத்து ரெடி பண்ணிக் கொண்டாள். இன்று காலை அவள் மிக மும்முரமாக சமையல் வேலையில் ஈடுபட்டாள். தனியாகவே முழுதும் செய்தாள். மூன்று வித கொழுக்கட்டைகள், வடை, பாயஸம், முருங்கை சாம்பார், கோஸ் கறி பண்ணினாள்.
பூஜை ஆரம்பிக்க மிகவும் லேட்டாகியது. 12 மணிக்குத்தான் ஆரம்பிக்க முடிந்தது. நான் மந்திரம் சொல்ல, அர்விந்த் பூஜை செய்தான். முடிக்கும்போது 1 மணிக்கும் மேலாகி விட்டது. 1-45க்கு சாப்பாடு.
இவ்வாறாக இந்த ஆண்டு விநாயகர் பூஜை நன்கு நடந்தேறியது. காயத்ரியும் 11 மணிக்கு செய்தாள். நீரஜா பண்ணவில்லை.
குழந்தை அர்ஜுனுக்கு இது முதல் பிள்ளையார்-சதுர்த்தி.
பூஜை முடிந்ததும் குழந்தை அதிதி நிறைய பாடல்கள் பாடினாள். ”எனக்கு வேண்டும் வரங்களை ..” பாட்டைத் தவறாமல் பாடினாள்.
ராஜப்பா
20-9-2012
காலை 9:15
பின்குறிப்பு: இன்று (20-09-2012) மாலை 5 மணிக்கு பெஸண்ட்நகர் கடலுக்கு அதிதியும் கிருத்திகாவும் சென்று பிள்ளையாரை வழியனுப்பி வந்தனர்.
Comments