வைத்தீஸ்வரன் கோயில் எங்கள் குடும்பத்தினர் 11 பேரும் (குழந்தைகள் உட்பட) வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போக திட்டமிட்டு, இரண்டு கார்களில் செல்வதாக எண்ணம். அஷோக், நீரஜா இருவரும் பெங்களூரிலிருந்து வியாழன் டிசம்பர் 23 (2010) அன்று இரவு சென்னை வந்தனர். மறுநாள் காஞ்சிபுரம் சென்றோம். அடுத்த நாள் (சனிக்கிழமை, 25-12-2010) காலை இரண்டு கூட்டாக வை.கோயில் புறப்பட்டோம். சென்னையிலிருந்து சுமார் 267 கிமீ தூரத்தில் உள்ளது. ECR roadல் பயணித்தோம். அருண் காரில், அருண் குடும்பமும், அஷோக்-நீரஜாவும் 6-45க்கு கிளம்பினர். பிச்சாவரம் சென்றுவிட்டு, எங்களுடன் சேர்ந்து கொள்வதாக ப்ளான். அர்விந்த், கிருத்திகா, அதிதி, விஜயா, நான் ஆகியோர் காலை 11-15க்கு அர்விந்த் காரில் (LINEA) கிளம்பினோம். புதுச்சேரியை பகல் 2 மணிக்கு அடைந்து, அங்கு HOTEL SURGURU (SV Patel Road) வில் சுவையான லஞ்ச் சாப்பிட்டோம் (ரூ 83/-). அங்கிருந்து 2-45க்கு கிளம்பி, சிதம்பரத்தை 4-20 க்கு அடைந்தோம். அங்கு அருண் ஆகியோர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். ஸ்ரீ நடராஜர் கோயிலை சுற்றிப் பார்த்தோம். நல்ல தரிஸனம் கிடைத்தது. மாலை ஏழு மணிக்கு சிதம்பரத்தை விட்டு